Adhani meets Sabareesan | டீல் முடித்த சபரீசன்? அதானி மீட்டிங் ரகசியங்கள்! 4 மணி நேரம் நடந்தது என்ன?
சென்னை வந்த தொழிலதிபர் கவுதம் அதானி முதல்வர் ஸ்டாலினின் மருமகன் சபரீசனை சந்தித்து பேசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது சூட்டை கிளப்பியுள்ளது..
திமுக தமிழ்நாட்டின் நன்மைக்காக வேலை செய்கிறது, ஆனால் பிரதமர் மோடியோ அதானியின் வளர்ச்சிக்காக இரவு பகலாக வேலை செய்கிறார், என்று சொன்னது வேறு யாருமில்லை, திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான். இப்படி பாஜக அரசு அதானிக்கு வாரி வழங்குவதாக, பல்வேறு குற்றச்சாட்டுகளை திமுகவினர் தொடர்ந்து சொல்லி வந்துள்ளனர்.
இப்படிபட்ட சூழலில் தான் நேற்றைய தினம் தனி விமானத்தில் சென்னை வந்த கௌதம் அதானி, விமான நிலையத்தில் இருந்து நேரடியாக புறப்பட்டு சென்னையின் ஒரு தனியார் ஹோட்டலில் தங்கியிருந்ததாகவும். அங்கே முதல்வர் ஸ்டாலினின் மருமகன் சபரீசன் நேரடியாக சென்று கவுதம் அதானியை சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் மோடிக்கு நெருக்கமான தொழிலதிபர் அதானிக்கு சென்னையில் திமுகவுடன் என்ன வேலை என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த சந்திப்பின் பின்னணியில் சில முக்கிய டீலிங்குகள் முடிந்திருக்கலாம் என்ற தகவல்களும் பரவி வருகிறது.
ஏற்கனவே சென்னை அருகே கொசஸ்தலை ஆற்றை பாதிக்கும் வகையில் செயலபட்டு வரும் காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்க திட்டத்தில், அதானிக்கு ஆதரவாக திமுக நிற்பதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம்சாட்டி வருகிறார்.
மேலும் இந்தாண்டு தொடக்கத்தில் நடைப்பெற்ற உலக முதவீட்டாளர்கள் மாநாட்டில், 42700 கோடி ரூபாய்க்கு அதானி குழுமம் தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை கையெழுத்திட்டது.
முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தான அந்த ஒப்பந்தம் குறித்து, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் ”பெரிய பெரிய அம்பானி, அதானிக்கு தான் மத்திய அரசு எல்லாம் செய்வதாக குற்றம்சாட்டிவிட்டு, தற்போது அதானியுடன் சேர்ந்து திமுக அரசு டேட்டா செண்டர் ஆரம்பிப்பது ஏன்” என்று கேள்வி எழுப்பியிருந்தார்..
இந்நிலையில் அண்மை காலமாக திமுக தரப்பும் அதானியை பெரிய அளவில் விமர்சிப்பதை தவிர்த்து வந்தது, இத்தகைய சூழலில் தான் கவுதம் அதானியின் சந்திப்பு குறித்து பேசியுள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை “திமுகவின் பவர் செண்டராக முதல்வர் ஸ்டாலினின் மருமகன் சபரீசன் இருப்பதாகவும், அவரை கவுதம் அதானி நேரில் சென்று சந்தித்துள்ளதாகவும், விரைவில் இதன் மர்மங்கள் வெளியே வரும்” என்று குற்றம்சாட்டை தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் திமுக கூட்டணி கட்சியினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.