Aadhav Arjuna Suspend : “எனக்கு பதவி கொடுங்க விஜய்”ஆதவ் போடும் CONDITION ஷாக்கில் புஸ்ஸி ஆனந்த்!
திமுகவை தொடர்ந்து விமர்சித்த ஆதவ் அர்ஜூனா-ஐ விசிகவில் இருந்து திருமாவளவன் இடைநீக்கம் செய்வதாக அதிரடி அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்தநிலையில் ஆதவ் தனக்கு தவெக கட்சியில் துணைத் தலைவர், அல்லது இணைப் பொதுச்செயலாளர் ஆகிய முக்கிய பொறுப்பு ஒன்று உருவாக்கித் தர வேண்டும் என்று விஜயிடம் கேட்டுக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
புத்தக வெளியீட்டு விழாவை வைத்து அரசியல் களத்தையே புரட்டி போட்டுள்ளார் விசிக துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா. விஜய்யை மேடையில் வைத்துக் கொண்டே முழுக்க முழுக்க திமுகவை அட்டாக் செய்வதாகவே ஆதவ் அர்ஜூனாவின் பேச்சு இருந்தது. திமுகவிற்கு எதிரான கருத்துக்கள் இந்த நிகழ்ச்சியில் இடம் பெற வாய்ப்பு இருப்பதை முன்பே கிரகித்த திருமாவளவன், அந்த நிகழ்ச்சியையே புறக்கணித்துவிட்டார்.
இந்நிலையில் அம்பேத்கரை பெருமைப்படுத்தும் நிகழ்ச்சி என்ற பெயரில், பெயரளவில் அம்பேத்கரை தொட்டுவிட்டு விஜய்யும், ஆதவ் அர்ஜூனாவும் அரசியல் பேசியதை கண்டு ஆதங்பட்டுள்ளார். திமுகவிற்கு எதிராக சில கருத்துக்கள் இருக்கலாம் என்பதை கணித்தாலும், தன்னுடைய 24 நிமிட பேச்சில் ஆதவ் அர்ஜூனா வெறும் 10 நிமிடங்கள் மட்டும் அம்பேத்கரை பற்றி பேசிவிட்டு மொத்தமாக திமுகவை அட்டாக் செய்ததை பார்த்து திருமா பொறுமி தள்ளியுள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில் விசிக முக்கிய புள்ளிகள் ஆதவ் அர்ஜூனாவுக்கு எதிராக ஆரம்பத்தில் இருந்தே போர்க்கொடி தூக்கியுள்ளனர். ஆதவ் கட்சிக்குள் வந்தவுடன் மிகப்பெரிய பதவியை தூக்கி கொடுக்கலாமா, சீனியர்களை ஓரங்கட்டிவிட்டு கட்சியை கட்டுப்பாட்டுக்கள் வைத்திருக்க பார்க்கிறார், அவர் சொல்வதை கேட்டுதான் கட்சி செயல்படுகிறது என திருமாவளவன் காதுகளுக்கு அடிக்கடி புகார் சென்று வந்துள்ளது. ஆனால் திருமா அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் ஆதவ் அர்ஜூனாவை கூடவே வைத்திருந்ததால் விசிக சீனியர்களும் அதிருப்தியில் இருந்ததாக பேச்சு இருந்தது. இதனால் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் திமுகவினர் கருதி, அவருக்கு எதிராக திருமா உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். கட்சிக்குள்ளேயே ஒரு எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன், கட்சியினருக்கு இது ஒரு "தவறான முன்மாதிரியாக" அமைந்து விடும் என்கிற சூழலையும் உருவாக்கியுள்ளது.
இந்தநிலையில் விரைவில் ஆதவ் அர்ஜூனாவை கட்சியில் இருந்து நீக்கியோ அல்லது தற்காலிகமாக இடைநீக்கம் செய்து உத்தரவிட்டோ விரைவில் அறிவிப்பு வரும் என்று எதிர்ப்பார்க்கபட்ட நிலையில் ஆதவ்-ஐ தற்காலிக இடைநீக்கம் செய்து திருமாவளவன் அதிரடி ஆக்ஷனில் இறங்கியுள்ளார்.
தன் மீது நடவடிக்கை எடுக்கப்படுவது உறுதியாகிவிட்ட நிலையில், விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தில் சென்று சேர ஆதவ் அர்ஜூனா முடிவு செய்திருப்பதாகவும், அந்த கட்சியில் தனக்கு துணைத் தலைவர், அல்லது இணைப் பொதுச்செயலாளர் ஆகிய முக்கிய பொறுப்பு ஒன்று உருவாக்கித் தர வேண்டும் என்று ஆதவ் அர்ஜூனா விஜயிடம் கேட்டுக் கொண்டுள்ளதாகவும், அதற்காக வரும் சட்டமன்ற தேர்தலில் தன்னுடைய அரசியல் வியூக வகுப்பு நிறுவனம் மூலம் தமிழக வெற்றிக் கழகத்திற்காக பணியாற்ற தான் தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளதாகவும் தகவல் கசிந்துள்ளது