Aadhav Arjuna Suspended: 6 மாதம் சஸ்பெண்ட்.. ஆதவ் அர்ஜூனா மீது Action.. திருமாவளவன் அதிரடி!

Continues below advertisement

விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனாவை கட்சியில் இருந்து இடை நீக்கம் செய்வதாக விசிக தலைவர் திருமாவளவன்  உத்தரவிட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் ஆதவ் அர்ஜூனா திமுக பற்றி பேசியது திமுக கூட்டணியில் புயலை கிளப்பியது. இதனைத் தொடர்ந்து விசிக துணைப்பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனாவை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்று விசிக துணைப்பொதுச்செயலாளர்கள் போர்க்கொடி தூக்கினார்கள். 

இதனைத் தொடர்ந்து ஆதவ்  அர்ஜூனாவை ஆறு மாதம் இடை நீக்கம் செய்து அக்கட்சியில் தலைவர் திருமாவளவன் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,”கட்சியின் துணை பொதுச் செயலாளர் திரு. ஆதவ் அர்ஜூனா அவர்கள் அண்மைக் காலமாக கட்சியின் நலன்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறார் என்பது  தலைமை நிர்வாகத்தின் கவனத்துக்குத் தெரிய வந்தது.  

இது குறித்து கடந்த  07-12-2024 அன்று கட்சியின் பொதுச் செயலாளர்கள் உள்ளிட்ட முன்னணித் தோழர்களுடன் கலந்தாய்வு செய்யப்பட்டது. கட்சித் தலைமையின் அறிவுறுத்தல்களையும் மீறி, தொடர்ச்சியாக அவர் எதிர்மறையாக செயல்பட்டு வருவதும்; அத்தகைய செயல்பாடுகள், மேலோட்டமாக நோக்கினால் கட்சியின் நலன் மற்றும் அதிகார வலிமைக்கானதாகத் தோன்றினாலும்; அவை கட்சி மற்றும்  தலைமையின் மீதான நன்மதிப்பையும் நம்பகத் தன்மையையும் கேள்விக்குள்ளாக்கும் வகையில், பொதுவெளியில் கடுமையான விமர்சனங்களை உருவாக்கியிருக்கிறது.

இத்தகைய போக்குகள், கட்சிப் பொறுப்பாளர்களிடையே நிலவும் கட்டுக்கோப்பைச் சீர்குலைக்கும் வகையில், கட்சிக்குள்ளேயே ஒரு எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன், கட்சியினருக்கு இது ஒரு "தவறான முன்மாதிரியாக" அமைந்து விடும் என்கிற சூழலையும் உருவாக்கியுள்ளது.


இத்தகைய சூழலைக்கருத்தில் கொண்டு, கட்சியின் நலன்களை முன்னிறுத்தி,கட்சித் தலைவர் மற்றும்  பொதுச்செயலாளர்கள் ஆகிய மூவர் உள்ளடங்கிய தலைமை நிர்வாகக் குழுவில்,  ஆதவ் அர்ஜூனா அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்வதென தீர்மானிக்கப்பட்டது. அதன்படி, திரு. ஆதவ் அர்ஜூனா அவர்கள் கட்சியிலிருந்து ஆறுமாத காலத்துக்கு இடைநீக்கம் செய்யப்படுகிறார்”என்று கூறியுள்ளார். ஆதவ் அர்ஜூனை இடை நீக்கம் செய்து திருமா உத்தரவிட்ட சூழலில் தவெகாவில் ஆதவ் ஆர்ஜூனா இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram