IAS Transfer | 37 IAS அதிகாரிகள் மாற்றம்..ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்! பின்னணி என்ன?

Continues below advertisement

தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 37 ஐஏஎஸ் அதிகாரிகளை முதலமைச்சர் ஸ்டாலின் இடமாற்றம் செய்ததன் பின்னணியில் முக்கிய காரணங்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது.

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே திமுக தலைமையிலான அரசை எதிர்க்கட்சிகள் பல்வேறு விவகாரங்களில் குற்றம்சாட்டி வருகின்றன. குறிப்பாக கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரம் முதல் பகுஜன் சமாஜ் வாதி தலைவர் ஆம்ஸ்டிராங் கொலை ஆகியவற்றை வைத்து தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு கெட்டு விட்டதாக விமர்சித்து வருகின்றனர். 

தமிழ்நாட்டில் இதுபோன்று அடுத்தடுத்து நடந்த சம்பவங்களால் அதிகாரிகள் மீது கோபமடைந்த முதலமைச்சரும், தவறு எங்கே நடந்தது என்பதை அறிய குழு ஒன்றை அமைத்து ஆய்வு செய்து ரிப்போர்ட் வாங்கியதாக கூறப்படுகிறது. இதனை வைத்து பல அதிரடி மாற்றங்களில் இறங்கினார் முதலமைச்சர். 

உள்துறை செயலாளராக இருந்த அமுதா ஐஏஎஸ் , சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையர் ராதகிருஷ்ணன் ஆகியோர் அதிரடியாக பணியிடை மாற்றம் செய்யப்பட்டனர். தற்போது தமிழக அரசின் தலைமை செயலாளராக சிவ்தாஸ் மீனா அதிரடியாக அந்த பொறுப்பில் இருந்து மாற்றப்பட்டு  அவருக்கு பதிலாக புதிய தலைமை செயலாளராக முருகானந்தம் ஐஏஎஸ் பொறுப்பெற்றுள்ளார். 

பல துறைகளில் சரியாக செயல்படாமல் இருந்த ஐஏஎஸ் அதிகாரிகளின் லிஸ்ட்டை வைத்து முதலமைச்சர் உத்தரவின்பேரில் அடுத்தடுத்து பணியிடமாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. 

எதிர்க்கட்சியினர் திமுகவை தொடர்ந்து விமர்சித்து வரும் நேரத்தில், 2026 தேர்தலையும் மனதில் வைத்தே தற்போது இருந்தே ஆக்ஷனில் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது. அதிகாரிகள் முறையாக செயல்படுகிறார்களா என்பதை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram