
Namakkal Collector Uma | ”இதான் தக்காளி சாதமா?கறாராக பேசிய கலெக்டர் ஆடிப்போன அதிகாரிகள்
தக்காளி சாதத்தில் தக்காளியே இல்லை, பருப்பு சாதம் மாதிரி இருக்கு என்று அங்கன்வாடி மையத்தில் மாவட்ட ஆட்சியர் உமா செய்து குழந்தைகளுக்கு சமைக்கப்பட்ட உணவை சாப்பிட்டு பார்த்து திடீர் ஆய்வு மேற்கொண்டதில் பரபரப்பு ஏற்பட்டது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்துள்ள நாமகிரிப்பேட்டை பகுதியில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 10க்கும் மேற்பட்ட குழந்தைகள் படிக்கின்றனர். இங்கு திடீர் ஆய்வு மேற்கொண்ட நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா 6 மாதத்திற்கு ஒரு முறை மருத்துவர்கள் வந்து பார்க்கிறார்களா? பூச்சிக்கொல்லி மருந்து கொடுக்கிறார்களா என கேட்டறிந்தார். மையத்திற்கு வருகை தரும் குழந்தைகளின் எண்ணிக்கை, வருகை பதிவேடு, குழந்தைகளின் வயதிற்கேற்ற எடை, உயரம் பதிவேடு உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து, குழந்தைளுக்கு வழங்க தயார் செய்யப்பட்டிருந்த உணவினை சாப்பிட்டு பார்த்தவர் எங்கம்மா தக்காளி சாதத்தில் தக்காளியே இல்லை, பருப்பு சாதம் போல் உள்ளது என்றார்.
ABCD சொல்லிக் கொடுத்தாங்களா? என ஆட்சியர் குழந்தையிடம் கேட்க, அதற்கு அந்த குழந்தை மழலை மொழியில், 'நான் சொல்லமாட்டேன்' என்ற குழந்தையிடம் ஆட்சியர் உமா, 'நீ சொன்னால் சாக்லேட் தருவேன்' என, கூறியதும் அந்த குழந்தை அடுத்த விநாடியே A எனக் கூறி குழந்தை ஆச்சர்யப்படுத்தியது.