Keerthana | ”ENGLISH-ல பேசுங்க” திகைத்து நின்ற மாணவி! பள்ளியில் கீர்த்தனா!எல்லை மீறும் ரீல்ஸ் மோகம்?

Continues below advertisement

அரசுப் பள்ளி மாணவிகளிடம் அமைச்சர் கீர்த்தனா ஆங்கிலத்தில் பேசும் போது அவர்கள் பதில் அளிக்க முடியாமல் திணறியதும், இதையே LAST BENCH-ல கேளுங்க என சொன்ன வீடியோ வைரலாகி வருகிறது. last Bench என்று சுட்டிக்காட்டி பேசுபவர்கள் எல்லாம் பள்ளிகளுக்குள் செல்லாதீர்கள், தாழ்வு மனப்பான்மையை வளர்க்காதீர்கள் என முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கண்டித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே திருத்தங்கலில் உள்ள அரசுப் பள்ளியில் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா ஆய்வு மேற்கொண்டார். பள்ளியில் உள்ள வகுப்பறை, சமையலறை உள்ளிட்டவைகளை ஆய்வு செய்த அவர் அதன் தரத்தை மேம்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அப்போது அங்கிருந்த மாணவிகளிடம் அவர் ஆங்கிலத்தில் பேசும் போது அவர்கள் பதில் அளிக்க முடியாமல் திணறினர். பின்னர் ஆசிரியரை வைத்து மாணவியிடம் ஆங்கிலத்தில் உரையாட சொன்னார். உடனே மாணவி ஆசிரியர் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொன்னார். பின்னர் இதையே LAST BENCH-ல் இருப்பவர்களிடம் கேட்டால் அவர்களுக்கு சிரமமாக இருக்கும் என சொன்னது சமூக வலைதளங்களில் விமர்சனத்தில் சிக்கியுள்ளது.

முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அமைச்சர் கீர்த்தனாவுக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவரது பதிவில் தான் நினைப்பதுதான் சரி என பிடிவாதம் பிடிப்பது ஆய்வின் பணி அல்ல! அமைச்சரின் பணியும் அதுவல்ல! மாணவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். ஆசிரியப் பெருமக்களை ஊக்கப்படுத்த வேண்டும். அதை விடுத்து Last Bench என்று சுட்டிக்காட்டி பேசுபவர்கள் எல்லாம் பள்ளிகளுக்குள் செல்லாதீர்கள். மாணவச் செல்வங்களிடம் தாழ்வு மனப்பான்மையை வளர்க்காதீர்கள். தப்போ சரியோ தைரியமாக பதில் சொன்ன அன்பு மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் அன்பும் வாழ்த்துகளும்” என தெரிவித்துள்ளார்.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola