
Madurai Dalit Issue | ”சாதி பெயர சொல்லி...சிறுநீர் அடித்து கொடூரம்”கதறி அழுத சிறுவன்!
உசிலம்பட்டி அருகே பட்டியலின இளைஞர் மீது சிறுநீர் கழித்தும், அடித்து துன்புறுத்தியும் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுக்குறித்து முதற்கட்டமாக 2 சிறுவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சங்கம்பட்டியைச் சேர்ந்த 17 வயது பட்டியலின இளைஞர் பள்ளி படிப்பை முடித்துவிட்டு டிரம்ஸ் வாசிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். கடந்த 16ஆம் தேதி பொங்கலன்று முன்பகை காரணமாக அதே ஊரைச் சேர்ந்த கிஷோர், உக்கிரபாண்டி, பிரம்மா, சந்தோஷ், நிதிஸ், மணிமுத்து என்ற 6 பேர் கடத்தி சென்று கண்மாய் பகுதியில் வைத்து சுமார் 20க்கும் மேற்பட்டோர் பட்டியிலன இளைஞரை மண்டியிட வைத்தும், காலில் விழ வைத்தும், சிறுவர்களை வைத்து சிறுநீர் கழித்து சாதிய வன்கொடுமை செய்ததாக குற்றம்சாட்டி உசிலம்பட்டி டிஎஸ்பி அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.
இந்த புகாரின் பேரில் 6 பேர் மீது சாதிய வன்கொடுமை உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த உசிலம்பட்டி நகர் காவல் நிலைய போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில் பட்டியலின இளைஞர் மீது சிறுநீர் கழித்தாக கூறும் குற்றச்சாட்டு தவறானது என மதுரை மாவட்ட எஸ்.பி.அரவிந்த் அறிக்கை வெளியிட்டார். இந்நிலையில் இன்று இந்த வழக்கில் தொடர்புடைய சங்கம்பட்டியைச் சேர்ந்த இரு சிறுவர்களை உசிலம்பட்டி நகர் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில் கிஷோர் உள்ளிட்டோர் மட்டுமே பட்டியலின இளைஞரை தாக்கியதாகவும், நாங்கள் உடன் மட்டுமே இருந்தோம், நாங்கள் ஏதும் செய்யவில்லை என தெரிவித்தாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.