Madurai News | அடிச்சது பாருங்க லக்..சிதறிய ரூ.500 நோட்டுகள் அள்ளிச் சென்ற மக்கள்

அடிச்சது பாருங்க லக்..சிதறிய ரூ.500 நோட்டுகள் அள்ளிச் சென்ற மக்கள்

 

உசிலம்பட்டியில் சாலையில் சிதறி விழுந்த 3 லட்சம் மதிப்பிலான 500 ரூபாய் நோட்டுகள், அள்ளிச் சென்ற பொதுமக்கள் - சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேனி ரோட்டில் உள்ள மாமரத்துபட்டி விலக்கு பகுதியில் தேனியிலிருந்து மதுரை சென்ற வாகனத்திலிருந்து 500 ரூபாய் நோட்டுகள் சிதறி பறந்து நெடுஞ்சாலையில் விழுந்தது.,சுமார் 100 மீட்டர் தொலைவிற்கு சாலையில் சிதறி கிடந்த 500 ரூபாய் நோட்டுகளை அப்பகுதி வழியாக சென்ற பொதுமக்கள், அருகில் இருந்த பொதுமக்கள் என அனைவரும் அள்ளி சென்றனர்., இந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.,

 

சுமார் 3 லட்சம் மதிப்பிலான இந்த 500 ரூபாய் நோட்டுகள் அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்திலிருந்தோ, பேருந்திலிருந்தோ வீசப்பட்டதா? அல்லது தவறி கீழே விழுந்ததா என அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் உசிலம்பட்டி நகர் காவல் நிலைய போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.,

மேலும் இந்த பணம் குறித்து யாரும் புகார் அளிக்காத சூழலில், புகார் அளித்தாலும் பொதுமக்களால் அள்ளி செல்லப்பட்ட பணத்தை மீட்க முடியுமா என கேள்வியும் எழுந்துள்ளது.,

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola