Salem VCK cadre | ”கதையை முடிக்கிறேன் பாரு” மிரட்டும் விசிக நிர்வாகி! பெண் அலுவலருடன் வாக்குவாதம்

Continues below advertisement

”யாருனு தெரியாம பேசிட்டு இருக்க, கதையை முடிக்கிறேன் பாரு” என சேலம் காடையாம்பட்டி தாலுகா அலுவலகத்தில் பணியாற்றும் பெண் அலுவலரை விசிக நிர்வாகி ஒருமையில் மிரட்டும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பண்ணப்பட்டி கிராமம் கங்கேயனூர் ஆதிதிராவிடர் காலணியை சேர்ந்தவர் ஆண்டி. இவர் பண்ணப்பட்டி கிராம நிர்வாக அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்து கடந்த 2001-ம் ஆண்டு இறந்துவிட்டார். அவரது மகன் பிரகாசம் என்பவர் கருணை அடிப்படையில் வாரிசு வேலை கேட்டு மனு அளித்துள்ளார். தந்தை இறந்து மூன்று ஆண்டுக்குள் வாரிசு வேலை கேட்டு விண்ணப்பிக்க வேண்டும். ஆனால், பிரகாசம் ஐந்து ஆண்டுகள் கழித்து வாரிசு வேலை கேட்டு விண்ணப்பித்துள்ளார். அதனால் அதிகாரிகள் உரிய நேரத்தில் விண்ணப்பிக்கவில்லை என்று சொல்லி, மனு விசாரணையில் உள்ளதாக கூறியுள்ளனர்.

இந்தநிலையில் விசிக கட்சியின் சேலம் மண்டல துணை செயலாளர் ஆறுமுகம், காடையாம்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் புகுந்து அங்கு பணிபுரியும் உதவியாளர் கலா என்பவரிடம், வாரிசு வேலை என்ன ஆச்சு, சம்பளம் வாங்குவதற்கு வேலை செய்யுங்கள் நீங்கள், எந்த சங்கத்தில் இருந்தாலும் எனக்கு பயமில்லை என ஆக்ரோஷமாக பேசும் வீடியோ வெளியாகியுள்ளது. விசிக நிர்வாகியின் இந்த செயலுக்கு அரசு ஊழியர் சங்கத்தினரும், பொதுமக்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அலுவலத்திற்கு உள்ளேயே வந்து மிரட்டும் நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram