Chain snatching : கணவர் கண்முன்னே மனைவியை தரதரவென இழுத்துச் சென்ற திருடர்கள்! பதறவைக்கும் CCTV காட்சி

Continues below advertisement

மதுரையில் தீபாவளி ஷாப்பிங் முடித்துவிட்டு கணவருடன் வீடு திரும்பிய பெண்ணிடம், வீட்டு வாசலில் வைத்து இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் செயின் பறிக்க முயன்ற நிலையில், கீழே விழுந்த அப்பெண்ணை பைக்கில் சென்ற கொள்ளையர்கள் செயினுடன் தரதரவென இழுத்து சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை பந்தடி பகுதியை சேர்ந்தவர்கள் துவாரகநாத் -மஞ்சுளா தம்பதியினர். இவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை தீபாவளி சாப்பிங் முடித்துவிட்டு இருசக்கவர வாகனத்தில் இரவு வீடு திரும்பியுள்ளனர்.இந்த நிலையில் கணவர் வீட்டு வாசலில் வாகனத்தை நிறுத்திய போது மஞ்சுளா வாகனத்தில் இருந்து கீழே இறங்கியுள்ளார். அப்போது R15 பைக்கில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் மஞ்சுளா கழுத்தில் அணிந்திருந்த தங்க செயினை பறிக்க முற்பட்டனர்.

அப்போது மஞ்சுளா செயினை கெட்டியாக பிடித்துக்கொண்டதால் இருசக்கர வாகனத்தில் வந்த கொள்ளையர்கள் மஞ்சுளவை தர தர என சாலையில் இழுத்தவரே வாகனத்த்தில் வேகமாக சென்றனர். இதில் ஜெயின் இரண்டாக உடைந்து ஒரு பகுதி கொள்ளையர்கள் கையிலும், மற்றொரு பாகம் மஞ்சுளா கழுத்திலும் இருந்தது. தற்போது இச்சம்பவத்தினுடைய பரபரப்பு சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
அவர் கழுத்தில் அணிந்திருந்த செயின் மூனே முக்கால் பவுன் என கூறப்படுகிறது.

மேலும், இச்சம்பவம் தொடர்பாக தெற்கு வாசல் காவல்த்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

மதுரையில் பொதுமக்கள் நடமாட்டம் உள்ள தெருவில் இதுபோன்ற செயின் பறிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram