Diamond necklace Urbaser : குப்பையில் வைர நெக்லஸ்! கண்டுபிடித்த தூய்மை பணியாளர்!குவியும் பாராட்டுகள்
Diamond necklace Urbaser : குப்பையில் வைர நெக்லஸ்! கண்டுபிடித்த தூய்மை பணியாளர்!குவியும் பாராட்டுகள்
சென்னையில் குப்பைத் தொட்டியில் இருந்து 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான வைர நெக்லஸை கண்டுபிடித்து கொடுத்த தூய்மை பணியாளருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
தேவராஜ் என்பவர் ராஜமன்னார் சாலையில் உள்ள அபார்ட்மெண்ட் ஒன்றில் வசித்து வருகிறார். இவரது வீட்டில் இருந்த 5 லட்சம் மதிப்பிலான வைர நெக்லஸ் காணாமல் போனதால் அதிர்ச்சியடைந்தார். ஒருவேளை குப்பைகளுடன் சேர்த்து குப்பை தொட்டியில் கொட்டி விட்டோமோ என சந்தேகம் வந்தது. அதனால் சென்னை மாநகராட்சியில் தூய்மை பணிகளை மேற்கொண்டு வரும் உர்பேசர் நிறுவனத்தை தொடர்பு கொண்டுள்ளார்.
உடனடியாக அங்குவந்த தூய்மை பணியாளரும், குப்பை வாகன ட்ரைவருமான அந்தோணிசாமி வந்து தேடியுள்ளனர். இறுதியில் குப்பை தொட்டியில் தேடி 5 லட்சம் மதிப்பிலான வைர நெக்லஸை கண்டுபிடித்து உரிமையாளரிடம் ஒப்படைத்துள்ளார். அவருக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். சென்னை மாநகராட்சி சார்பிலும் அந்த குழுவினருக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.