Karnataka govt bus | GOVT BUS-ல் அத்துமீறிய நபர்! கண்ணம் சிவக்க பளார் பளார்! பொளந்தெடுத்த இளம்பெண்

Continues below advertisement

பேருந்தில் தன்னிடம் அநாகரிகமாக நடந்து கொண்ட நபரை இளம்பெண் வெளுத்தெடுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

கர்நாடகாவில் நெலமங்களா பகுதியை நோக்கி அரசுப் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது பிங்க் நிற சட்டை அணிந்த நபர் ஒருவர் இளம்பெண் ஒருவரை இடித்து கொண்டு தகாத முறையில் நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான அந்த பெண் எதுவும் சொல்லாமல் அமைதியாக அழுது கொண்டு இருந்துள்ளார்.

அப்போது அருகில் இருந்த பெண் என்ன ஆனது என்று அவரிடம் கேட்ட போது அந்த நபர் அநாகரிகமாக நடந்து கொள்வதாக கூறியுள்ளார். உடனே ஆத்திரமடைந்த அந்தப் பெண் பேருந்தை நிறுத்த சொல்லி சம்பந்தப்பட்ட நபரிடம் வாக்குவாதம் செய்துள்ளார்.

பின்னர் நடத்துநரும், சக பயணிகளும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திலேயே வைத்து உடனடியாக தண்டனை கொடுத்தால் தான் இனி இப்படி நடக்காது என சொல்லி இளம்பெண்ணை அந்த நபரை அடிக்க சொல்லியுள்ளனர். மன வேதனையில் இருந்த பெண் சம்பந்தப்பட்ட நபரை பேருந்திலேயே வைத்து வெளுத்தெடுத்துள்ளார். பின்னர் அந்த நபரை அங்கேயே இறக்கிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் டிக்கெட் விவரங்களை கொடுத்தால் எந்த வழித்தடத்தில் செல்லும் பேருந்து என்பதை கண்டுபிடிக்க முடியும் என KSRTC எக்ஸ் தளத்தில் ரிப்ளை கொடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கர்நாடக அமைச்சர் பைரதி சுரேஷ் மாஸ்க் அணிந்து சாதாரண பயணி போல பேருந்தில் ஆய்வு மேற்கொண்டு வசமாக சிக்கிய ட்ரைவர், கண்டக்டர்கள் மீது நடவடிக்கை எடுத்த நிலையில், கர்நாடக பேருந்தில் அரங்கேறியுள்ள பாலியல் துன்புறுத்தல் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola