Israel Lebanon war : போர்க்களத்தில் ABP NEWS! பதற வைக்கும் காட்சிகள்

Israel Lebanon war : போர்க்களத்தில் ABP NEWS! பதற வைக்கும் காட்சிகள்

 

லெபனானின் பெய்ரூட்டில் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தி வரும் நிலையில் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. லெபனானின் பெய்ரூட்டில் போர்க்களத்தில் இருந்து ஏபிபி நியூஸ் தகவல்களை வழங்கி வருகிறது. இஸ்ரேல் நடத்தி வரும் தரை மற்றும் வான் வழி தாக்குதலால் கடந்த 24 மணி நேரத்தில் லெபனானில் 37 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 151க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். பெய்ரூட்டில் முன்னெச்சரிக்கை ஏதுமின்றி இஸ்ரேல் குண்டு மழை பொழிந்தது, லெபனான் மக்களை அச்சத்திலும் பரிதவிப்பிலும் ஆழ்த்தியுள்ளது. குண்டு மழைக்கு நடுவே ஏபிபி நியூஸ் களத்தில் இருந்து நேரடி தகவல்களை வழங்கி வருகிறது. ஏபிபி-ன் மூத்த பத்திரிகையாளர் ஜக்விந்தர் பாட்டியால் குண்டு மழைக்கு நடுவே கள நிலவரத்தை வழங்கும் பரபரப்பு காட்சிகள் வெளியாகியுள்ளன.

 

இஸ்ரேல் – ஈரான் இடையிலான போர் மத்தியக் கிழக்கு ஆசிய நாடுகளில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், நேரடிக் களத்துக்கு ABP News சென்றுள்ளது. அங்கிருந்து நமது மூத்த செய்தியாளர் ஜக்வீந்தர் பாட்டியால் தரும் நேரடி தகவல்கள்:

இஸ்ரேல் மீண்டும் தனது தாக்குதலைத் தொடங்கி உள்ளது. லெபனானின் பெய்ரூட் சர்வதேச விமான நிலையத்துக்கு வெளியே இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. இந்தத் தாக்குதலில் ஹிஸ்புல்லா முன்னாள் தலைவர் ஹஸ்ஸன் நஸ்ரல்லாவின் சகோதரர் ஹஷெம் சைஃபுதீன் கொல்லப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola