Woman doctor found dead | மருத்துவ மாணவி கொலை! பகீர் வாக்குமூலம்! காட்டிக்கொடுத்த BLUETOOTH

Continues below advertisement

கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் மருத்துவமனையில் கிடைத்த சிசிடிவி காட்சிகளை வைத்து பல திடுக்கிடும் உண்மைகள் போலீசாருக்கு தெரியவந்துள்ளன.

கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் ஒருவர் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். இரண்டாம் ஆண்டு முதுகலை மருத்துவ மாணவரான அவர் இரவு தாமதமாக உணவு சாப்பிட்டுவிட்டு மூன்றாவது மாடியில் உள்ள செமினார் ஹாலில் படிக்கச் சென்றார். மறுநாள் காலை அவர் இறந்த நிலையில் இருந்ததை பார்த்த சக மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர். மேலும் கொல்லப்படுவதற்கு முன்பு அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது உடற்கூறாய்வில் உறுதி செய்யப்பட்டது.

மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு மேற்கு வங்கம் முழுவதும் போராட்டங்களும் வெடித்துள்ளன. இந்த சம்பவம் ஆளுங்கட்சிக்கு பெரும் நெருக்கடியாக மாறிய நிலையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா தேவைப்பட்டால் குற்றவாளியை தூக்கில் போடுவோம் என அதிரடி காட்டினார்.

உடனடி நடவடிக்கையில் இறங்கிய போலீசார் சில மணிநேரங்களில் மருத்துவனையில் கிடைத்த சிசிடிவி காட்சிகளை வைத்து  சஞ்சய் ராய் என்பவரை கைது செய்தனர். சஞ்சய் ராயிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ளன. சஞ்சய் ராய் Civic volunteer ஆக இருந்துள்ளார். மேற்கு வங்க போலீசுக்கு இணைந்து செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டது என்று கூறப்படுகிறது. இதனால் அவருக்கு மருத்துவமனையின் எல்லா பகுதிக்கும் சுலபமாக சென்று வர முடிந்ததுள்ளது. 

சம்பவத்தன்று அதிகாலை 4 மணி அளவில் மதுபோதையில் மருத்துவமனை உள்ளே சென்றுள்ளார், அப்போது அவர் கழுத்தில் ஒரு ப்ளூடூத் இயர்போன் இருந்துள்ளது, அவர் மீண்டும் 40  நிமிடங்கள் வெளியே வரும்போது அவரது காதில் அந்த ப்ளு டூத் இல்லாமல் இருந்துள்ளது. 

இது தான் சஞ்சய் ராயை பிடிக்க துருப்பு சீட்டாக இருந்ததுள்ளது, கொலை நடந்த இடத்தில் ஆய்வு செய்த போலீசாருக்கு சேதமடைந்த நிலையில் ஒரு ப்ளூடூத் இயர்போன் கிடைத்துள்ளது. அது கடைசியாக சஞ்சய் ராயின் போனில் கனெக்ட் செய்யப்பட்டிருந்தது. இதன் அடிப்படையிலே சஞ்சய் ராயை கைது செய்துள்ளனர்.

மேலும் சம்பவம் நடந்த நேரத்தில் செமினார் ஹால் அருகில் 6 பேரின் நடமாட்டம் இருந்துள்ளது. அவர்களில் 5 பேர் அந்த இடத்தில் இருந்தற்கான காரணத்தை கூறிய நிலையில் சஞ்சய் ராய் மட்டும் சரியான காரணத்தை சொல்லாமல் இருந்ததாகவும் பின்னர் அவரே குற்றத்தை ஓப்புக்கொண்டதாகவும் சொல்லப்படுகிறது.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram