CM-ஐ கன்னத்தில் அறைந்த நபர் முடியை இழுத்து தாக்குதல் டெல்லியில் நடந்தது என்ன? | Rekha Gupta Attacked
டெல்லி முதல்வர் ரேகா குப்தாவை இன்று திடீரென மர்மநபர் தலைமுடியை பிடித்து கண்ணத்தில் அறைந்த சமவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் மக்களின் குறைகளை கேட்டு விசாரணைகளை மேற்கொண்டிருந்த போது, இந்த தாக்குதல் நடந்ததாகவும் இந்த தாக்குதலில் ரேகா குப்தாவுக்கு லேசான காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
டெல்லி முதல்வர் ரேகா குப்தா மீது தாக்குதல் சம்பவமானது சிவில் லைன்ஸில் உள்ள அரசு இல்லத்தில் நடந்த பொது விசாரணையின் போது டெல்லி முதல்வரை தாக்க முயற்சி நடந்ததுள்ளது. ஆதாரங்களின்படி, அவர் பல முறை அறைந்ததாக சொல்லப்படுகிறது, மேலும் அவரது தலைமுடியையும் பிடித்து இழுத்து அறைந்த்தாக கூறப்படுகிறது.
தாக்குதல் நடத்தியவர் 35 வயதுடையவர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. பொது விசாரணையின் போது, அந்த நபர் சில ஆவணங்களை கையில் எடுத்து வந்துள்ளார். அப்போது, அவர் முதல்வரைத் தாக்க முயன்றதாக தெரிகிறது. இந்தத் தாக்குதல் ஆம் ஆத்மி கட்சியுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்று பாஜக குற்றம் சாட்டி வருகின்றனர். இதற்கு ஆம் ஆத்மி கட்சியிடமிருந்து இதுவரை எந்த பதிலும் இல்லை.
தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் நபரை போலீசார் கைது செய்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவரை சிவில் லைன்ஸ் காவல் நிலையத்திற்கு போலீசார் அழைத்துச் சென்று விசாரித்து வருகின்றனர். விசாரணைக்கு பிறகு இது குறித்து விரிவான தகவல்கள் வெளியாகும் என காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த சம்பத்திற்கு பாஜகவினர் பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.