ED raid Dmk ministers : ED வலையில் 3 அமைச்சர்கள்?நெருங்கும் சட்டமன்ற தேர்தல்நெருக்கடி கொடுக்கும் பாஜக
செந்தில் பாலாஜி, பொன்முடி, துரைமுருகன், ஐ பெரியசாமி, அனிதா ராதாகிருஷ்ணன் என திமுகவின் பிக்சாட்டுகள் பலரும் ஈடி வளையத்திற்குள் சிக்கியிருக்கும் நிலையில், இந்த லிஸ்டில் புதிதாக 3 அமைச்சர்களின் பெயரும் இடம்பெற்றுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் எதிர்க்கட்சியான அதிமுகவுடன் கூட்டணியில் இருக்கும் மத்திய பாஜக தொடர்ந்து திமுக அரசுக்கு குடைச்சல் கொடுத்து வருகிறது. இந்நிலையில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்து ஓராண்டுக்கும் மேலாக சிறையில் அடைத்தது ஈடி. இதனையடுத்து முன்னாள் அமைச்சர் பொன்முடி, அமைச்சர் துரைமுருகன், அனிதா ராதாகிருஷ்ணன் என அனைவரின் பழைய ஃபைல்ஸ்களையும் தோண்டி எடுத்து நடவடிக்கை மேற்கொண்டது அமலாக்கத்துறை.
இதனையடுத்து தற்போது 2026 தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மீண்டும் தனது ஆட்டத்தை தொடங்கியுள்ளது அமலாக்கத்துறை. அதன்படி சில நாட்களுக்கு முன் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ பெரியசாமிக்கு சொந்தமான மற்றும் அவரது மகன் மகளுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தியது. 10 ஆண்டுகளுக்கு முன்னால் தொடர்ந்த வழக்கை தற்போது கிளறி எடுத்து ஆக்ஷனில் ஈடி இறங்கியுள்ளது தேர்தல் நேரத்தில் திமுகவுக்கு குடைச்சல் கொடுக்கும் ஓர் உத்தி தான் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.
இந்நிலையில் தான் இந்த லிஸ்ட் இதோடு நிற்க போவதில்லை எனவும் திமுகவில் படு ஆக்டிவ்வாக செயல்பட்டு வரும் 3 அமைச்சர்களின் பெயரும் ஈடி பட்டியலில் இருப்பதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆகியோர் தான் ஈடியில் அடுத்த டார்கெட் பட்டியலில் உள்ளதாக சொல்லப்படுகிறது.
மேலும் பாஜக அரசு அமலாக்கத்துறையை எதிர்க்கட்சியினரை நெருக்கும் ஓர் ஆயுதமாக பயன்படுத்தி வருவதாக குற்றச்சாட்டு ஏற்கனவே முன்வைக்கப்பட்டுள்ளது. தேர்தல் நெருங்கும் நேரத்தில்தான், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் அமலாக்கத்துறையின் நடவடிக்கைகள் தீவிரமடைந்தும் வருகிறது. உதாரணமாக தேர்தல் சமயத்தில் டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது, ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் கைது ஓர் எடுத்துக்காட்டு..டெல்லியில் கெஜ்ரிவால் தோல்வியுற்று பாஜக ஆட்சியை பிடித்தது. ஆனால் ஜார்க்கண்டில் மாஸ்டர் ப்ளான் வொர்க் அவுட் ஆகவில்லை. அதுபோல் தமிழக முதல்வர் ஸ்டாலின் பாஜகவின் ஈடி கேமில் இருந்து மீண்டு மீண்டும் ஆட்சியை பிடிப்பாரா என்ற எதிர்பார்ப்புகள் எகிறி வருவதாக சொல்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.