TN Youngster Viral video | ”ஒட்டகம் மேய்க்க விட்டுட்டாங்க.. PLZ காப்பாத்துங்க..செத்துருவேன்”

கத்தார் நாட்டில் ஓட்டுநர் வேலை வாங்கி தருவதாக கூறி தன்னை கொத்தடிமையாக நடத்துவதாக தமிழர் ஒருவர் தன்னை தாய் நாட்டுக்கு  மீட்டு வர வேண்டும் என கண்ணீர் மல்க அரசுக்கு  கோரிக்கை  வைக்கும் வீடியோ ஒன்று சமூக  வலைதளங்களில் வைரலாகி  வருகிறது. 

கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள ஐவதுகுடி பகுதியைச் சேர்ந்த சக்திவேல் இவர் மத்திய கிழக்கு நாடான கத்தாரில் டிரைவர் வேலைக்கு ஏஜென்ட் மூலம் சென்று இருந்தார். 

அங்கு சென்ற அவருக்கு டிரைவர் வேலை கொடுக்காமல் ஒட்டகம் மேய்க்கவும், அங்கு வரும் அந்நாட்டுகாரர்களுக்கு பணிவிடை செய்ய  சொல்லி கொடுமைப்படுத்துவதாகவும் வீடியோ வெளியிட்டு இருந்தார்.
மேலும் தன்னை ஒரு கொத்தடிமைப்போல நடத்துவதாகவும் அதனால் தன்னை உடனாடியாக மீட்டு தாயகம் அழைத்து வர உதவ வேண்டும் என்று அரசுக்கு கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளார்.

 

கர்த்தார் நாட்டில் கொத்தடிமையாக ஒட்டக மேய்க்கும் தமிழன்.! தாயகம் திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க அரசுக்கு கோரிக்கை!

கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள ஐவதுகுடி பகுதியைச் சேர்ந்த சக்திவேல் (28), இவர் மத்திய கிழக்கு நாடான கர்த்தாரில் டிரைவர் வேலைக்கு ஏஜென்ட் மூலம் சென்று இருந்தார். 

அங்கு சென்ற அவருக்கு டிரைவர் வேலை கொடுக்காமல் ஒட்டகம் மேய்க்கவும், அங்கு வரும் அந்நாட்டுகாரர்களுக்கு பணிவிடை செய்ய  சொல்லி கொடுமைப்படுத்துவதாகவும் வீடியோ வெளியிட்டு தாயகம் திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்! 

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பகிரப்பட்டு  வருகிறது!

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola