OPERATION SINDOOR என்றால் என்ன?ஏன் இந்த பெயர் வைக்கப்பட்டது?ஆபரேசன் சிந்தூர் பின்னணி?

பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடிகொடுக்க ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய பாதுகாப்புப் படைகள் தாக்குதல் நடத்தியுள்ள நிலையில் 'சிந்தூர்' என்ற பெயர் ஏன் தேர்வு செய்யப்பட்டது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் தீவிரவாதிகள் கொடூரமான தாக்குதலை நடத்தினார்கள். இதில் இந்தியர்கள் 26 பேர் கொல்லப்பட்டனர். இது இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்களை தேடிச்சென்று இந்தியா அழிக்கும் என்று பிரதமர் மோடி கூறினார்.

இதனால் இ ந்தியா - பாகிஸ்தானுக்கு இடையே போர் பதற்றம் நிலவிய சூழலில் தான் நள்ளிரவு ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய பாதுகாப்புப் படைகள் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பதிங்கி இருக்கும் தீவிரவாதிகளுக்கு பதிலடி கொடுத்து வருகின்றன.  இந்திய ராணுவம், விமானப் படை, கடற்படை நள்ளிரவில் இந்த தாக்குதலை நடத்தியது. அந்தவகையில் பாகிஸ்தானின் 4 இடங்களிலும் , பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 5 இடங்களிலும் இந்த தாக்குதல் நடைபெற்றதாக தகவல் வருகிறது.

இதுவரை 100-க்கும் மேற்ப்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று 11 மணிக்கு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.  இதனிடையே ஆபாரேஷன் சிந்தூர் என்று பெயர் வைத்தர்கான காரணம் வெளியாகியுள்ளது.  அதாவது, சிந்தூர் என்ற பெயருக்கு இன்னொரு அர்த்தம் 'திலகம்' ஆகும்.  இந்து கலாச்சாரத்தில் திருமணமான பெண்கள் குங்குமம் போன்ற திலகங்களை அணிந்து கொள்வது வழக்கம்.  

இந்நிலையில், பஹல்காமில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் இந்துக்களை குறிவைத்து குறிப்பாக இந்து மதத்தைச் சேர்ந்த பெண்களின் திலகங்களை அழிக்கும் விதமாக அவர்களின் கணவர்களை கொன்றதற்கு பழிவாங்கும் விதமாக இந்த தாக்குதல் நடவடிக்கைக்கு 'ஆபரேஷன் சிந்தூர்' எனப் பெயரிடப்பட்டதாக சொல்லப்படுகிறது.  இது தொடர்பாகா இந்திய ராணுவம் வெளியிட்டுள்ள பதிவிலும் குங்கும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola