Operation Sindoor Indian Army: ”ஆபரேஷன் சிந்தூர்” இந்தியா அதிரடி தாக்குதல்! மிரண்டு போன பாகிஸ்தான்

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடிகொடுக்கும் வகையில்,  பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் 5 இடங்களிலும் பாகிஸ்தானின் 4 இடங்களிலும் இந்திய ராணுவம் நள்ளிரவில் அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளது. ஆபரேசன் சிந்தூர் என்ற பெயரில் நடந்த இந்த தாக்குதலில் இதுவரை 100 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் தீவிரவாதிகள் கொடூரமான தாக்குதலை நடத்தினார்கள். இதில் இந்தியர்கள் 26 பேர் கொல்லப்பட்டனர். இது இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இந்த தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகள் நினைத்து கூட பார்க்காத வகையில் தண்டனை கொடுக்கப்படும் என்று இந்தியா அறிவித்தது.பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் 5 இடங்களிலும் பாகிஸ்தானின் 4 இடங்களிலும் இந்திய ராணுவம் நள்ளிரவில் அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளது.

ஆபரேசன் சிந்தூர் என்ற பெயரில் நடந்த இந்த தாக்குதலில் 100 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். அதன்படி இந்தியா எந்தெந்த இடங்களில் தாக்குதல் நடத்தியுள்ளது என்ற தகவலும் வெளியாகியுள்ளது. அதாவது பாகிஸ்தானில் உள்ள லஷ்கர் இ தொய்பா தலைமையகம் உள்ள பர்னாலா, முஷாஃபராபாத், மற்றும் ஜெய்ஸ் இ முகமது செயல்படும் பஹவல்பூர், தெஹ்ரா காலன், ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாத அமைப்பின் கோட்லியில் இரு இடங்கள்  சிகல்கோட் பகுதிகளிலும் இந்திய ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளது. 

அதன்படி, மொத்தம்  9 இடங்களில் தீவிரவாதிகளை குறிவைத்து இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தியாவின் இந்த அதிரடி ஏவுகணை தாக்குதல் 100-க்கும் மேற்ப்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தீவிரவாதிகள் மீதான இந்த தாக்குதலுக்கு இந்தியா ரபேல் போர் விமானங்களை பயன்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola