Modi at Kanyakumari : விவேகானந்தர் vs மோடி.. அதே மூன்று நாட்கள்! கன்னியாகுமரி தியானம்!
132 ஆண்டுகளுக்கு பின் சுவாமி விவேகானந்தர் தியானம் மேற்கொண்ட கன்னியாகுமரி கடற்கரை அருகே விவாகானந்தர் மண்டபம் அமைந்துள்ள ஒற்றை பாறையில் அதுவும் தமிழகத்தில் பிரதமர் மோடி 3 நாட்கள் தொடர் தியானத்தில் இருக்கபோகும் செய்தி நாடு முழுவதும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.
1892ல்.. அதாவது சரியாக 132 ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தின் கன்னியாகுமரிக்கு வருகிறார் சுவாமி விவேகானந்தர். அப்போது கன்னியாகுமரின் கடற்கரையின் அருகே அமைந்துள்ள ஒற்றை பாறை அவரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
உடனே சற்றும் யோசிக்காமல் கடலில் குதித்த விவேகானந்தர் 300 மீட்டர் தூரம் நீந்தி சென்றே அந்த பாறையை அடைந்ததாகவும், அங்கே 3 நாட்கள் அமர்ந்து தியானம் செய்ததாகவும் வரலாறு சொல்கிறது.இந்நிலையில் தான் விவேகானந்தருக்கு அடுத்த படியாக, அங்கே 3 நாட்கள் தொடர் தியானத்தில் ஈடுபட உள்ளார் பிரதமர் மோடி. இதனால் கன்னியாகுமரியே பரபரத்து வருகிறது.
நாளை மாலை விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்திறங்கும் மோடி மாலை 4 அளவில் ஹெலிஹாப்டரில் கிளம்பி கன்னியாகுமரி வந்தடைகிறார். பின்னர் சிறிது நேரம் ஓய்வுக்கு பின் 5.40 மணிக்கு படகில் சவாரி மேற்கொண்டு கன்னியாகுமரி கடற்கரையிலிருந்து விவேகானந்தர் நினைவிடம் சென்றடைகிறார். அங்கு செல்லும் அவர் விவேகானந்தர் நினைவிடத்தில் 31, 1 ஆகிய தேதிகளிலும் தொடர் தியானத்தில் ஈடுப்படுகிறார். சரியாக சனிக்கிழமை மாலை, அதாவது இறுதி கட்ட தேர்தல் நடைப்பெறும் ஜுன் 1ம் தேதி மாலை 3 மணிக்கு விவேகாந்தர் நினைவிடத்திலிருந்து புறப்பட்டு செல்கிறார்.
இதே போன்று கடந்த மக்களவை தேர்தலின் போதும் பிரச்சாரம் நிறைவு பெற்ற பின்னர் உத்தரகாண்ட் சென்ற பிரதமர் மோடி கடல் மட்டத்திலிருந்து 11,755 அடி உயரம் கொண்ட கேதார்நாத் கோவிலுக்கு சென்று 17 மணி நேரம் அங்குள்ள பனிக்குகையில் தியானத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் பிரதமர் மோடி வருகையால் 3 நாட்களுக்கு சுற்றுலா பயணிகள் அனுமதி வழங்கபடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று காலை முதலே விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு போடப்பட்டுள்ள நிலையில் மோப்ப நாய் சோதனை, வெடிகுண்டு சோதனைக்கு பின்னரே சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.