Delhi Car Blast CCTV | டெல்லி கார் குண்டு வெடிப்புபின்னணியில் காஷ்மீர் மருத்துவர்?சிசிடிவி காட்சிகள்

Continues below advertisement

நேற்று டெல்லி செங்கோட்டை அருகே கார் ஒன்றில் குண்டு வெடித்த சம்பவம் நாடு முழுவதும் பதற்றத்தை உருவாக்கியுள்ள நிலையில், சம்பவம் நடப்பதற்கு முன் அந்த காரை மருத்துவர் உமர் முகமது என்பவர் ஓட்டி வரும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

டெல்லி செங்கோட்டை மெட்ரோ நிலைய நுழைவு வாயில் 1 அருகே கார் ஒன்று திடீரென வெடித்து சிதறியதால் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. டெல்லி தீயணைப்புத்துறையினருக்கு இன்று மாலை 6:55 மணியளவில் வெடிப்பு குறித்து அழைப்பு வந்ததாக சொல்லப்படுகிறது. அதன் பிறகு ஏழு தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 15 ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன. தீயணைப்பு வீரர்கள் உடனடியாக போராடி  தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
மேலும் இச்சம்பவத்தில் 10 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 24 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். 

இதனை தொடர்ந்து பாகிஸ்தான் பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பில் இருந்த 3 டாக்டர்கள் உள்பட 8 பேர் காஷ்மீரில் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருநந்து நாட்டு வெடிகுண்டுகள் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் அந்த கார் குண்டு வெடிப்புக்கு முன் சாலையில் அந்த காரை உமர் முகமது என்ற மருத்துவர் ஒருவர் ஓட்டிவரும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

இந்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்டவர் என சொல்லப்படும் உமர் இந்த சம்பவத்தில் உயிரிழந்தாரா அல்லது தலைமறைவாகிவிட்டாரா என்பது குறித்து தகவல் இன்னும் வெளியாகவில்லை.மேலும் காரை ஓட்டி வந்த நபர்,  ஹரியானாவில் வெடிபொருட்கள் வைத்திருந்ததாக கைதான மருத்துவரின் கூட்டாளி எனக் கூறப்படுகிறது.

மேலும் இந்த குண்டு வெடிப்பில் அமோனியம் நைட்ரேட் ரசாயனம் பயன்படுத்தப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் தற்கொலைப் படைத் தாக்குதலாக என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola