மழைக்கு ரெடியா? நவம்பர் நிலைமை என்ன?வெதர்மேன் அப்டேட்

Continues below advertisement

நவம்பரில் வடகிழக்கு பருவமழை ஏமாற்றியுள்ள நிலையில், இனிவரும் நாட்களில் மழைக்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாக வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

வடகிழக்கு பருவமழை ஆரம்பமானதும் தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பரவலாக மழை செய்தது. வங்கக் கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு பகுதியும் பெரிய அளவில் மழையை கொடுக்காமல் ஏமாற்றியது. அதன்பிறகு உருவான மோந்தா புயலும் எதிர்பார்த்த அளவுக்கு தமிழ்நாட்டுக்கு மழையை கொடுக்கவில்லை. 

கடந்த 10 நாட்களாக பெரும்பாலான மாவட்டங்களில் வறண்ட வானிலையே நீடிக்கிறது. . நவம்பர் 10ஆம் தேதி வரை வெறும் 15 மி.மீட்டர் மழை மட்டுமே பதிவாகியுள்ளது. இதன் காரணமாக எப்போதும் இல்லாத வகையில் வட கிழக்கு பருவமழை நவம்பர் மாதம் மோசமான நிலையில் இருக்கிறது. அதனால் இனி வரும் நாட்களில் வடகிழக்கு பருவமழை கை கொடுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக தனியார் வானிலை ஆய்வாளர் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள பதிவில்,

தமிழ்நாட்டின் நவம்பர் காலத்தில் இயல்பான மழை அளவு அளவு 181.7 மி.மீ. பெரும்பாலாலும் நவம்பர் மாதம் நல்ல மழை கிடைத்திருந்தாலும் அரிதாகவே பருவமழை தோல்வி அடைந்திருக்கும். வரலாற்றில் இல்லாத வகையில் கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் மட்டும் 425 மி.மீட்டர் மழைப்பொழிவு கூட இருந்துள்ளது.

நவம்பர் 10, 2025 வரை 15.1 மி.மீ மட்டுமே பதிவாகியிருப்பதால், கடந்த பத்தாண்டுகளில் மிக மோசமான நிலையில் இந்த நவம்பர் மாதம் உள்ளது.  இருப்பினும்,  நவம்பர் 17-20 மற்றும் நவம்பர் 24-26  (± 1 நாள்) ஆகிய தேதிகளில் மழைக்கான சாத்தியக்கூறுகள் உள்ளது. நவம்பர் 11-13 வரை ஓரளவு மழை பெய்யும், தென் தமிழகத்தில் மீண்டும் மழைக்கு வாய்ப்பு உள்ளது. அதிலும் தமிழ்நாட்டிற்கு நவம்பர் 17 முதல் 20 மழைக்கான வாய்ப்பு  நன்றாக இருக்கும்.
இருந்த போதும் தற்போதைய கேள்வி என்னவென்றால், குறைந்தபட்சம் 125 மிமீ மழையை தாண்ட முடியுமா? என்பது தான். எனவே வரும் நாட்களில் மழை அளவை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். 

அதேபோல் யிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய பகுதிகளில் நாளை கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சொல்கின்றனர்.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola