சிக்கி தவிக்கும் தேர்தல் ஆணையம் வெச்சு செய்யும் எதிர்க்கட்சிகள் பாயிண்ட்ஸ் எப்ப வரும் SIR? | Congress | Rahul Gandhi vs ECI

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே விவசாயி நிலத்தில் வளர்ந்திருந்த கருவேல மரங்களை வெட்டி வித்த உறவினர்களை விவசாயியை தட்டிக்கேட்க அவரை தாக்கி கால் முறிவை ஏற்படுத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரின் காரை மரித்து கண்ணீர் மல்க மனு கொடுக்க ஆட்சியர் உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள கே. புதுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் செல்லதுரை. இவர் அப்பகுதியில் மூன்று சென்ட் நிலத்தை வாங்கி விவசாயம் செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சில ஆண்டுகளாக அப்பகுதியில் போதிய மழை பெய்யாததால் செல்லதுரை அவரது 3 சென்ட் நிலத்தில் விவசாயம் செய்யாமல் இருந்துள்ளார்.  இதனால் அந்த இடத்தில் கருவேல மரங்கள் வளர்ந்துள்ளது.

இந்நிலையில் செல்லதுரையின் உறவினர்களான ராமன், லட்சுமணன், விமல் மற்றும் அவரது குடும்பத்தினர் செல்லதுரைக்கு சொந்தமான நிலத்தில் வளர்ந்திருந்த கருவேல மரங்களை வெட்டி வித்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்துச் செல்லதுரை அதனை தட்டி கேட்டதால் அவரை ராமன் லட்சுமணன் விமல் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் தாக்கியதால் செல்லதுரைக்கு கால் முடிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து இது குறித்து கே புதுப்பட்டி காவல் நிலையத்தில் பலமுறை செல்லதுரை புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் செல்லதுரை இன்று தனது மனைவியின் உதவியுடன் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு கொடுக்க வந்தபோது மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் மாவட்ட ஆட்சியர் அருணாவின் கார் நுழையும் போது அவரது காரை மறித்த செல்லதுரை மற்றும் அவரது மனைவி அழுதபடியே தங்களுக்கு நடந்தவற்றை எடுத்துக் கூறி அதனை மனுவாக ஆட்சியரிடம் வழங்கினர்.

இதையடுத்து காரில் இருந்தபடியே மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் அருணா செல்லதுரை மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல்துறைக்கு உத்தரவிட்டார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola