Chandrababu Naidu Escape Train Accident : உயிருக்கே ஆபத்து!நொடியில் தப்பிய சந்திரபாபு!

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு வெள்ள ஆய்வுக்காக ரயில் பாதையில் நடந்து சென்ற போது எதிர்பாரா விதமாக திடீரென ரயில் வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 


ஆந்திராவில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக மாநிலம் முழுவதும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கடும் சேதத்தை ஏற்படுத்தியுள்ள இந்த வெள்ளப்பெருக்கால் மாநிலமே ஸ்தம்பித்து போயுள்ளது. இந்நிலையில் விஜயவாடாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அதிகாரிகளுடன் ரயில்பாதையில் நின்றுகொண்டு வெள்ளப்பெருக்கை பார்வையிட்டார். 

இந்நிலையில் எதிர்பாராத விதமாக அந்த பாதையில் ரயில் ஒன்று எதிர்நோக்கி வர அனைவரும் பதறிப்போனார்கள்.இதைத்தொடர்ந்து ரயில்பாதைக்கு அருகில இருந்த குறுகிய பாலத்தின் மீது முதல்வர் சந்திரபாபு உட்பட அனைவரும் தஞ்சம் அடைந்தனர்.  கண் இமைக்கும் நேரத்தில் ரயிலும் கடந்து சென்றது. 

ஆய்வுக்காக சென்ற முதல்வர் சந்திரபாபு நாயுடு ரயில் விபத்தில் இருந்து நூலிழையில் உயிர் தப்பிய சமபவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola