Allu Arjun Arrested: கைது செய்த போலீஸ்.. மனைவிக்கு முத்தமிட்ட அல்லு அர்ஜூன்..EMOTIONAL வீடியோ!

பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூனை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் புஷ்பா 2. இதன் பிரீமியர் ஷோ, ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில்    நடைபெற்றது. அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில், ஏராளமானோர் மயங்கி விழுந்தனர். கூட்ட நெரிசலில் சிக்கிய ரேவதி என்ற பெண் உயிரிழந்தார்.

இந்நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், அனுமதியின்றி சிறப்புக் காட்சி திரையிட்ட சந்தியா திரையரங்கம், நடிகர் அல்லு அர்ஜுன் மற்றும் அவரது பாதுகாவலர்கள் குழு மீது சிக்கட்பள்ளி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் தான் தற்போது அல்லு அர்ஜுன் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார் .  அவரை கைது செய்த போலீஸார் போலீஸ் வாகனத்தில் காவல் நிலையம் அழைத்து சென்றுள்ளனர்.  அவருடன் திரையரங்க உரிமையாளர் மற்றும் மேலாளரும் கைது செய்யப்பட்டனர். அல்லு அர்ஜூன் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola