Bhoobalan IAS : ஸ்கெட்ச் போட்டு குழந்தை திருமணங்களை தடுத்த ஐஏஎஸ்.. யார் இந்த பூபாலன்?
கடந்த ஆண்டு ஜூலையில் கர்நாடகாவில் உள்ள பாகல்கோட் மாவட்டத்தில் ஜில்லா பரிஷர் அமைப்பின் தலைமை நிர்வாகியாக பதவியேற்ற ஒருவாரத்திற்குள் குழந்தை திருமணங்கள் அதிகரிப்பதன் தீவிரத்தை உணர்ந்தார் பூபாலன் ஐ.ஏ.எஸ், அந்த சமயத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் முதல் அலையை கையாளுவதிலும் பொதுமுடக்கத்தின் மூலம் தொற்றை கட்டுப்படுத்துவதிலும் மட்டுமே அரசு நிர்வாகம் கவனம் செலுத்தி வந்தது. பொதுமுடக்கத்தால் அதிகரித்த குழந்தை திருமணங்கள் இந்த நிலையில் கொரோனா பொதுமுடக்க காலத்தில் குழந்தை திருமணங்களை பற்றி புகாரளிக்கும் அழைப்புகளின் எண்ணிக்கை அதிகரித்ததை கண்டு கவலை அடைந்த பூபாலன் ஐ.ஏ.எஸ், கொரோனா வைரஸ் தொற்றின் பொதுமுடக்கமும் அதனால் மக்கள் வாழ்வாதாரங்களை இழந்ததுமே குழந்தை திருமணங்கள் அதிகரித்ததற்கான முக்கிய விளைவு என்கிறார் பூபாலன் ஐ.ஏ.எஸ். பொதுமுடக்க காலத்தில் மக்கள் தங்களது வாழ்வாதாரங்களை இழந்தநிலையில், தங்கள் குழந்தைகளின் திருமண செலவுகளை குறைப்பதற்காக 18 வயதிற்கு குறைவான சிறுமிகளுக்கு திருமணம் செய்து வைப்பதில் கவனம் செலுத்தி வந்தனர். கடந்தாண்டு ஏப்ரல் முதல் ஜூலை வரை மட்டும் கர்நாடகாவில் 107 குழந்தை திருமண வழக்குள் பதிவாகி இருந்தன.