Mayilsamy annadurai : 69 முறை தோற்ற அமெரிக்கா.. அசால்ட்டாக செய்து காட்டிய மயில்சாமி அண்ணாதுரை..

நீங்கள் பள்ளி மாணவனாக பொதுத்தேர்வுக்கு தயாராகி கொண்டிருக்கும் சமயத்தில் ஜோதிடர் ஒருவர் உங்கள் வீட்டிற்கு வந்து பெற்றோர் முன்னிலையில் உங்கள் ஜாதகத்தில் இனி மேல் படிப்பு படிக்கும் யோகம் இல்லை என்று சொல்லி இருந்தால் உங்கள் மனநிலை என்னவாக இருந்திருக்கும்? அந்த தேர்வை எப்படிப்பட்ட மனநிலையுடன் எழுத சென்றிருப்பீர்கள்? என்று நினைத்து பார்க்க முடிகிறதா? இதே போன்றதொரு பிரச்னையையை தனது பள்ளி இறுதியாண்டு படிக்கும் சமயத்தில் எதிர்கொண்ட மாணவர் ஒருவர், ஜோதிடரின் கணிப்பை தவிடுபொடியாக்கி அம்மாவட்டத்திலேயே முதல் மாணவனாக தேர்ச்சி பெற்றார். அதுமட்டுமில்லாமல் பிற்காலத்தில் அம்மாணவர் ஜோதிட சாஸ்திரத்தில் வரும் கிரகங்களான சந்திரனுக்கும் செவ்வாய்க்கும் கூட விண்கலம் அனுப்பும் அளவிற்கு சாதனைப்படைப்பான் என்பதை அந்த ஜோதிடர் கனவில் கூட நினைத்து பார்த்திருக்க மாட்டார். அப்படிப்பட்ட சாதனை மனிதர்தான் மயில்சாமி அண்ணாதுரை. 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola