மாத்திரையை கரைத்து போதை ஊசி.. தடம் மாறும் கோவை இளைஞர்கள் |
கோவை மாநகரப் பகுதிகளில் சமீப காலமாக போதைப் பொருட்களின் புழக்கம் அதிகரித்துள்ளது. இளைஞர்களையும், கல்லூரி மாணவர்களையும் குறி வைத்து புதிய புதிய வகைகளில் போதை பழக்கத்திற்கு அடிமையாக்கி வருவதும் நடந்து வருகிறது. இந்நிலையில் மாத்திரைகளை கரைத்து ஊசி மூலம் உடலில் ஏற்றி போதை ஏற்றும் முறையை சிலர் பின்பற்றி வருவது தெரியவந்துள்ளது. இந்நிலையில் கோவை இளைஞர்கள் இடையே போதைக்காக போதை ஊசி பயன்படுத்துவது அதிகரித்து உள்ளது. இதனைக் கட்டுப்படுத்த காவல் துறையினரும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.