Peacock Dance | தோகை விரித்து நடனம் மழையை வரவேற்ற மயில் ரம்மியமான காட்சி

Continues below advertisement

தோகை விரித்து நடனம் மழையை வரவேற்ற மயில் ரம்மியமான காட்சி

 

வாச்சாத்தி அருகே கருமேகம் சூழ்ந்த வேளையில், மலை மேல் உள்ள பாறை மீது சுமார் ஒரு மணி நேரமாக தோகை விரித்தாடிய அழகு மயில்.


தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் தருமபுரி மாவட்டத்தில் பரவலாக தினந்தோறும் மிதமான மழை பெய்து வருகிறது. இந்நிலையில் அரூர் அடுத்த வாச்சாத்தி அருகில் உள்ள மலையில் அரசநத்தம், கலசப்பாடி உள்ளிட்ட மலை கிராமங்கள் அமைந்துள்ளன. இந்த மலையில் தினமும் அடிக்கடி மழை பெய்து வருவதால்,  எப்பொழுதும் குளுமையான சூழல் நிலவி வருகிறது. 

தொடர்ந்து இன்று காலை முதலே அரூர், பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாலை 4 மணி அளவில் வாச்சாத்தி அருகில் மலையடிவார பகுதியில் இரண்டு மயில்கள் இரை தேடி சுற்றித் திரிந்து வந்தது. அப்போது கருமேகம் சூழ்ந்து மழை பொழியும் சீதோஷ்ண நிலை மாறிய போது, அங்கிருந்த மயில் தோகையை விரித்து ஆடியது. தொடர்ந்து கருமேகம் சூழ்ந்து வந்ததால்,  வாச்சாத்தி அருகில் மலை மீதுள்ள பாறையின் மேல், சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மயில் தோகையை விரித்து உற்சாக கூவிக் கொண்டே (மயில் அகவும்) ஆடியது. வாச்சாத்தி பகுதியில் மலையில் உள்ள பாறை மீது, பார்ப்பதற்கு ரம்மியமாக அழகு மயில் தோகை விரித்தாடிய காட்சியை பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram