CV Shanmugam on Nayanthara | ”எனக்கு நயன்தாரா வேணும்! கனவை நிறைவேத்துவாரா” எல்லை மீறிய சிவி சண்முகம்

நயன்தாரா குறித்து வாய்தவறி பேசிவிட்டதாக சொல்லி வருத்தம் தெரிவித்துள்ளார் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம்.

திமுக தலைமையிலான அரசில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு மற்றும் போதைப்பொருள் பழக்கம் அதிகரித்துள்ளதாக சொல்லி அதிமுக சார்பில் கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விழுப்புரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் நடிகை நயன் தாரா பற்றி சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார்.

சி.வி.சண்முகம் அநாகரிகமாக பேசியுள்ளது அரசியல் மற்றும் சினிமா வட்டாரத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்தநிலையில் தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து விளக்கம் கொடுத்துள்ளார் சி.வி.சண்முகம். அதில், விழுப்புரத்தில் நடைபெற்ற திமுகவின் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, பாலியல் வழக்குகள், போதைப் பொருள் பிரச்சினைகள் குறித்து கண்டனப் போராட்டத்தின் போது, “ஸ்டாலினின் கனவு கூறுங்கள்” என்ற ஏமாற்று வேலை குறித்து உரையாற்றிக் கொண்டிருந்தபோது, தவறுதலாக நயன்தாராவின் பெயர் உச்சரிக்கப்பட்டதாகவும், உள்நோக்கத்தோடு பேசவில்லை என்றும் தெரிவித்துள்ளார். வாய்தவறி பேசிவிட்டதாகவும், அப்படி பேசியதற்கு மனமார வருத்தம் தெரிவித்துக் கொள்வதாகவும் கூறியுள்ளார்.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola