இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

Continues below advertisement

பிரபல யூடியுபர் இர்பான் தனது குழந்தையின் பாலினத்தை வெளிப்படுத்திய விவகாரத்தில் விசாரணையை மீண்டும் துவக்க மருத்துவத்துறை அதிகாரிகள் தீவிரம் காட்டி வருவதாக தகவக் வெளியாகியுள்ளது.

கடந்த 2024 ஆம் ஆண்டிக்ல்  இர்பான் தனது மனைவி கர்ப்பமாக இருந்தபோது, துபாய் சென்று குழந்தையின் பாலினத்தைக் கண்டறிந்து, அதை தனது யூடியூப் பக்கத்தில் gender reveal வீடியோவாகப் பதிவிட்டார். 

இந்திய சட்டப்படி PCPNDT Actன் படி - கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை அறிவிப்பது) தண்டனைக்குரிய குற்றம் என்பதால், இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து, சுகாதாரத்துறை சார்பில் இர்பானுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டதுடன், காவல்துறையிலும் புகார் அளிக்கப்பட்டது. எனினும், அந்த வீடியோவை தனது பக்கத்தில் இருந்து நீக்கிய இர்பான், சுகாதாரத்துறையிடம் நிபந்தனையற்ற மன்னிப்பும் கோரினார். இதனைத் தொடர்ந்து, அவர் மீதான வழக்கு முடித்து வைக்கப்பட்டது. இர்ஃபான் மீது ஏன் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்கிற கேள்வி ஏழுந்தது

இந்தச் சூழலில்தான் யூடியூபர் இர்பான் மீது முறையான சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும், அவரை மீண்டும் நேரில் அழைத்து விசாரணை வளையத்திற்குள் கொண்டுவர வேண்டும் என்றும் வழக்கறிஞர் ஜெகநாத் என்பவர் புதிய புகாரைப் பதிவு செய்துள்ளார். இதனால் சுகாதாரம் மற்றும் மருத்துவத்துறை அதிகாரிகள் இந்த விவகாரத்தில் மீண்டும் தீவிரமான சட்ட நடவடிக்கைகளைத் தொடங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola