Surmount Logistics Rewards | ஊழியர்களுக்கு பைக், கார் பரிசுகெத்து காட்டும் நிறுவனம் அட நம்ம சென்னையில பா!
SURMOUNT LOGISTICS SOLUTIONS PVT. LTD நிறுவனர் டென்சில் ராயன், நிறுவன வெற்றிக்கு உறுதுணையாக இருந்த 20 ஊழியர்களுக்கு கார், பைக் உள்ளிட்டவற்றை வழங்கி கௌரவித்து, அவர்களது திறமையை அங்கீகரித்துள்ளார்.
சென்னையில் 2022 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சர்மவுண்ட் லாஜிஸ்டிக்ஸ் சொலியூஷன்ஸ் பிரைவேட் லிமிடெடின் (SURMOUNT LOGISTICS SOLUTIONS PVT. LTD) அசாத்திய வணிக வெற்றிக்கு அந்நிறுவனத்தின் ஊழியர்கள்தான் முதன்மைக் காரணம் என்பதை அதன் நிறுவனரும் நிர்வாக இயக்குனருமான திரு டென்சில் ராயன் உறுதியாக நம்புகிறார். அந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் 20 ஊழியர்களுக்கு டாடா கார்கள், ஹோண்டா ஸ்கூட்டர்கள் மற்றும் ராயல் என்ஃபீல்டு பைக் உள்ளிட்டவற்றை அவர் வழங்கினார். ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனம் இது போன்று தங்களது ஊழியர்களை கௌரவித்து மனிதவள கொள்கை கொண்டிருப்பது மிகவும் அரிதானது அதனை டென்சில் ராயனின் சர்மவுண்ட் லாஜிஸ்டிக்ஸ் சொலியூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் நிகழ்த்திக் காட்டியுள்ளது.
வாடிக்கையாளர்களின் மனநிறைவு என்பது நிறுவனத்தின் முக்கிய மதிப்பு என்று சர்மவுண்ட் லாஜிஸ்டிக்ஸ் சொலியூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் உறுதியாக நம்புகிறது. அதன் மூலம் வணிகர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவும் வணிகம் பெருகவும் வாய்ப்பு கிடைக்கும். குறிப்பாக, வியட்நாமில் கிளை அலுவலகத்தை நிறுவி சர்வதேச சந்தையில் கால்தடம் பதித்துள்ளது.
ஊழியர்கள் ஒரு பணியின் ஒரு பகுதியாக உணரும்போது, அவர்கள் தங்கள் வேலையில் பெருமிதம் கொள்கிறார்கள் மற்றும் நிறுவனத்தின் ஒட்டுமொத்த வெற்றிக்கு பங்களிக்கிறார்கள் என்று SURMOUNT LOGISTICS SOLUTIONS உறுதியாக நம்புகிறார்கள். மேலும், சர்மவுண்ட் லாஜிஸ்டிக்ஸ் சொலியூஷன்ஸ் ஆண்டு முழுவதும் ஊழியர்கள் ஈடுபாட்டுடன், அதிக இலக்குகளை அடையும் வகையில், அவர்களை ஊக்கபடுத்துவதை தங்களது லட்சியமாக கொண்டுள்ளனர்.