ஜெ.வின் ஆன்மீக வழிகாட்டி இன்று விஜய்யின் சிறப்பு அதிகாரி! யார் இந்த ரிக்கி ரதன்

தமிழக முதல்வர் விஜய்யின் அரசியல் பிரிவு சீறாப்பு அதிகாரியாக பிரபல ஜோதிடர் ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல் நியமிக்கப்பட்டிருப்பது பேசுபொருளாகியிருக்கிறது. இவர் யார், இவரின் பின்னணி என்ன என்பது குறித்து விரிவாகப் பார்க்கலாம்,

தவெக தலைமையில் புதிய அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், முக்கிய அரசு அதிகாரிகள் மாற்றப்பட்டு, புதிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.

முதலமைச்சர் விஜய்யின் முதன்மைச் செயலாளர்களாக ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் செந்தில்குமார், லட்சுமி பிரியா ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

அந்த வரிசையில், முதலமைச்சரின் அரசியல் சிறப்பு அதிகாரியாக ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல் இன்று நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கான அதிகாரப்பூர்வ அரசாணையையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

இவருக்கான பணிகள் என்ன தொடர்பான விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என தமிழக அரசு அந்த அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.

இந்த ரிக்கி ராதன் பண்டிட், மிகவும் பிரபலமான அரசியல் ஜோதிடர்களில் ஒருவர்.

வேத ஜோதிடம், எண் கணிதம் மற்றும் தியான அடிப்படையிலான வழிகாட்டுதலில் 40 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் பெற்றவராக உள்ளார்.

இவர் முன்னாள் முதலமைச்சர் மறைந்த ஜெ. ஜெயலலிதாவுக்கு ஆன்மீக வழிகாட்டியாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.

1991-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக பெரிய அளவில் வெற்றி பெற்று ஜெயலலிதா தலைமையில் ஆட்சி அமைக்கும் என இவர் கணித்திருந்தார்.

1994-ஆம் ஆண்டு ஜெயலலிதாவுக்கு ஒரு கடினமான காலகட்டமாக இருக்கும் என்று ராதன் பண்டிட் எச்சரித்ததாகக் கூறப்படுகிறது.

பின்னர், 2008-ல் இவர் தொழில் ரீதியாக டெல்லிக்குக் குடிபெயர்ந்தார்.

இவ்வாறிருக்க, தற்போது நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தவெக 150-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று, விஜய் முதலமைச்சராவார் என்று இவர்  கணித்தார்.

விஜய்யின் ஜாதகம் அசாதாரணமானது அல்ல. “சுனாமி போன்ற” வலிமை அவரின் ஜாதகத்தில் இருப்பதாக இவர் குறிப்பிட்டது சமூக வலைதளங்களில் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இவரின் நியமனம் அரசியல் வட்டாரங்களில் விவாதப்போருளாகியிருக்கிறது.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola