DRUGS-க்கு END உளவுத்துறைக்கு புதிய ஐ.ஜி CM விஜய் அதிரடி மூவ் யார் இந்த அஸ்ரா கார்க்?

Continues below advertisement

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் சிறப்பு புலனாய்வுக் குழுவின் தலைமை அதிகாரியகச் செயல்பட்ட காவல்துறை வடக்கு மண்டல ஐ.ஜி அஸ்ரா கார்க்கை, தமிழக அரசு உளவுத்துறை ஐ.ஜி-யாக நியமித்திருக்கிறது.

இந்த நியமனம் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இவரின் பின்னணி குறித்து விரிவாகப் பார்க்கலாம்.

பஞ்சாப் மாநிலத்திலுள்ள பாட்டியாலாவைச் சேர்ந்த இவர், அடிப்படையில் ஒரு மின்னணு பொறியாளர்.

எனினும் காவல்துறை மேல் கொண்ட ஈர்ப்பு காரணமாக 2004-ல் ஐபிஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று, தமிழ்நாடு கேடரில் பணியில் சேர்ந்தார்.

திருப்பத்தூரில் உதவி காவல் கண்காணிப்பாளராகத் தனது  காவல் பணியைத் தொடங்கிய அஸ்ரா கார்க், பின்னர் 2008-ல் ஆண்டு திருநெல்வேலி மாவட்ட எஸ்.பியாக நியமிக்கப்பட்டார்.

தொடர்ந்து மதுரையிலும் பணியாற்றிய இவர். தென்மாவட்டத்தில் தலைவிரித்தாடிய கந்து வட்டி கொடுமை, கட்டப்பஞ்சாயத்து ஆகியவற்றை கடுமையாக கட்டுப்படுத்தினார்.

மதுரையில் கிரானைட் குவாரி முறைகேடு, நில அபகரிப்பு தொடர்பான சம்பவங்களில் எந்த அழுத்தத்திற்கும் அடிபணியாமல் அதிரடி காட்டினார்.

அதைந்தொடர்ந்து, தர்மபுரி, தேனி ஆகிய மாவட்டங்களில் பணியாற்றிய அவருக்கு 2018-ல் டிஜஜியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டது.  

பின்னர், சில ஆண்டுகாலம் மத்திய அரசு பணியில் இருந்த மீண்டும் அஸ்ரா கார்க், 2022-ல் மீண்டும் ஆண்டு தமிழ்நாட்டிற்கு திரும்பினார்.

தற்போது வடக்கு மண்டல ஐஜியாக பொறுப்பேற்ற இவரின் கண்காணிப்பின் கீழ் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களின் சட்டம் ஒழுங்கு இருந்தது.

மேலும், கரூரில் 41 பேரை பலிவாங்கிய கூட்ட நெரிசல் சம்பவத்தில், தமிழ்நாடு அரசு சார்பில் அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழுவுக்கு தலைமைப் பொறுப்பை ஏற்றிருந்தார்.

இதைவிட குறிப்பாக, இவர் வடக்கு மண்டல ஐ.ஜி.யாக செயல்பட்டபோது, ​​2025 நவம்பரில் திருவள்ளூர் மாவட்ட காவல்துறையில் அவரின் குழு, இரண்டு நைஜீரியர்கள் உட்பட ஒரு பெரிய சர்வதேச மெத்தம்பெட்டமைன் கடத்தல் கும்பலைக் முறியடித்தது.

இது சமீப காலங்களில் மாவட்ட காவல்துறையால் பதிவு செய்யப்பட்ட முதல் பெரிய வழக்காகும்.

தற்போது தமிழ்நாட்டில் போதைப்பொருள் புழக்கம் மற்றும் கடத்தல் சம்பவம் அதிகரித்து வருவதாகக் கூறப்படும் நிலையில், உளவுத்துறை ஐ.ஜி-யாக அஸ்ரா கார்க் நியமிக்கப்பட்டிருப்பது, மாநிலங்களுக்கு இடையேயான மற்றும் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புகளை ஒழிப்பதற்கு உத்வேகம் அளிக்கும் என்று கூறப்படுகிறது.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola