MK Stalin on CV Shanmugam | ஆபாசங்களை அள்ளி இறைக்கின்றனர் CV சண்முகம் பேச்சால் அதிமுக-வை சாடிய ஸ்டாலின்

அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் நடிகை ஒருவரின் பெயரைப் பயன்படுத்தி சர்ச்சைகுரிய வகையில் பேசியிருந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் அதனைக் கடுமையான விமர்சித்திருக்கிறார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் நேற்று நடைபெற்ற கூட்டமொன்றில், `உங்கள் கனவைச் சொல்லுங்கள்' என்ற திட்டத்தை விமர்சிக்கும்போது, நடிகை ஒருவரின் பெயரைக் குறிப்பிட்டு ஆபாசமாகப் பேசி சர்ச்சையை ஏற்படுத்தினார்.

இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் கிளம்பியதையடுத்து சிவி சண்முகம் தன் பேச்சுக்கு வருத்தம் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து மன்னிப்பும் கோரினார்.

இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் அவரின் விமர்சிக்கும் வகையில் அதிமுகவை விமர்சித்திருக்கிறார்.

இது குறித்து தனது எக்ஸ் தளப் பதிவில், "எங்கள் மேடைகளில், தமிழ்நாட்டின் எதிர்காலத்தை வடிவமைத்துக் கொண்டிருக்கும் சாதனைகளையும், அவற்றால் பயனடைந்தவர்கள் குறித்தும் தரவுகளோடு சொல்லிக் கொண்டிருக்கிறோம்!

மறுபுறம், சொல்வதற்குச் சாதனைகளும் செயல்படுவதற்குக் கொள்கைகளும் இல்லாதவர்கள் ஆபாசங்களையும் அவதூறுகளையும் அள்ளி இறைத்துக் கொண்டிருக்கின்றனர்!

தமிழ்நாட்டு மக்கள் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்" ஸ்டாலின் பதிவிட்டிருக்கிறார்.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola