Drinking water mixed with sewage | குடிநீரில் கலந்த கழிவுநீர்? குடித்த நேரத்தில் பலியான 3 உயிர்..உச்சக்கட்ட பரபரப்பில் தாம்பரம்

Drinking water mixed with sewage | குடிநீரில் கலந்த கழிவுநீர்? குடித்த நேரத்தில் பலியான 3 உயிர்..உச்சக்கட்ட பரபரப்பில் தாம்பரம் | Tambaram | Chennai

 

 

அரசால் வழங்கப்பட்ட குடிநீரில் கழிவு நீர் கலந்ததால் அதனை பருகிய 2 பேர் உயிரிழந்துள்ளனர். 30க்கும் மேற்பட்டோர் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பல்லாவரம் மற்றும் ஆலந்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் அரசால் வழங்கப்பட்ட குடிநீரை குடித்த 30-க்கும் மேற்பட்டோர் கடும் வாந்தி மயக்கம் ஏற்பட்டு தற்போது அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குடிநீர் குடித்து உடல் உபாதை ஏற்பட்டு நிலையில் கெட்டுப்போன உணவு உண்டதால் தான் இந்த பிரச்சனை என திசை திருப்பும் செயலில் ஈடுபடுவதாகவும் மக்கள் குற்றச்சாட்டு. அரசு மருத்துவமனை மட்டுமின்றி தனியார் மருத்துவமனையிலும் பலர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தாம்பரம் மாநகராட்சி 13-வது வார்டில் கழிவுநீர் கலந்த குடிநீரை அருந்தியதில் 3 நபர்கள் உயிரிழந்து உள்ளதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola