Idumbavanam Karthik: ’’அரசியலுக்கு வாங்க..நேருக்கு நேர் மோதுவோம்!’’ இடும்பாவணம் கார்த்திக் சவால்
தைரியம் இருந்தா பதவியை ராஜினாமா பண்ணிட்டு அரசியலுக்கு வாங்க ப்ரோ நேருக்கு நேரா மோதுவோம் என எஸ்பி வருண்குமாருக்கு நாதக நிர்வாகி இடும்பாவணம் கார்த்தி சவால் விடுத்துள்ளார்.
பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைத்த இந்த ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாட்டில் பல்வேறு குழுக்களாக நாடு முழுவதுவதிலிருந்து நூற்றக்கணக்கான ஐபிஎஸ் அதிகாரிகள் பங்கேற்றனர். இளம் மாவட்ட எஸ்.பி.க்களாக உள்ள திறம்பட செயல்படும் போலீஸ் அதிகாரிகள் இந்த மாநாட்டிற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் இந்த மாநாட்டில் கலந்துகொண்ட திருச்சி எஸ்பி வருண்குமார் சைபர் குற்றங்கள் குறித்து விளக்கி பேசினார். அப்போது பேசிய அவர், ஒரு ஐபிஎஸ் அதிகாரியாக உள்ள தானும் தன்னுடைய குடும்பத்தினருமே தமிழ்நாட்டில் பாதிக்கப்பட்டதாகவும், அதற்கு காரணம், நாம் தமிழர் என்ற கட்சி என்றும் கூறினார். நாம் தமிழர் கட்சி, ஒரு பிரிவினைவாத இயக்கம் என்று குறிப்பிட்டார்.நூற்றுக்கும் மேற்பட்ட இளம் ஐபிஎஸ் அதிகாரிகள், மாவட்ட எஸ்.பி.க்கள் பங்கேற்ற ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாட்டில், திருச்சி எஸ்.பி. வருண்குமார் இவ்வாறு பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி இடும்பாவணம் கார்த்தி எஸ்பி வருண்குமாருக்கு சவால் விடுத்துள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட இடும்பாவணம் கார்த்தி,
Dear STRICT OFFICER..என வருண்குமாரின் பெயர் குறிப்பிடாமல் பதிவிட்ட இடும்பாவணம் கார்த்திக், ’’திமுகவுக்கு ஆதரவாக வேலை பாக்குறது,, மொறச்சு பாக்குற மாதிரி போட்டோ போடுறது, வாட்சப்ல ஸ்டேட்ஸ் வச்சுட்டு, அத செய்தியா போடச் சொல்லி பத்திரிக்கையாளர்கள்கிட்ட செய்தி போட சொல்வது, பிரிவினைவாத இயக்கம்ன்னு டெல்லில பேசறது, பொய் வழக்குப் போட்டு கைதுபண்றது, கைதுபண்றவங்கள அடிச்சு சித்ரவதை பண்றதுன்னு இல்லாமல அரசியலுக்கு நேரடியா வாங்க Bro!
துணிவு இருந்தா உங்க பதவிய ராஜினாமா பண்ணிட்டு, நேரடியா அரசியலுக்கு வாங்க..மோதுவோம்.. என வருண்குமாருக்கு சவால் விடுத்துள்ளார் இடும்பாவணம் கார்த்திக்