Cattle Attack CCTV | குழந்தையை முட்டி தூக்கிய மாடு.. காப்பாற்ற முயன்ற தாய்! பதறவைக்கும் CCTV காட்சி!

சாலையில் நடந்து சென்ற தாய் மற்றும் மகள் மீது மாடு ஒன்று ஆக்ரோஷமாக முட்டி தூக்கி வீசியுள்ளது. இது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


சென்னையில் உள்ள சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளால் நாள்தோறும் விபத்தை சந்திப்பதாக பொதுமக்கள் தொடர்ந்து வேதனை தெரிவித்து வருகின்றனர். பல முறை புகார் அளித்தும் உரிய நடவடிக்கை இல்லை எனவும் குற்றம்சாட்டுகின்றனர். சாலைகளில் கால்நடைகள் சுற்றி திரிவதால் விபத்துகள் ஏற்படுவது என்பது தொடர்கதையாகி வருகிறது. இந்த நிலையில், கொரட்டூரில் மாடு மோதியதால் பெண் ஒரு பலத்த காயம் அடைந்துள்ளார். பெண்ணை மாடு முட்டும் காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


சாலையில் பெண் ஒருவரும் அவரது மகளும் நடந்து சென்றுள்ளனர். அப்போது, மாடு ஒன்று நின்று கொண்டிருந்தது. சிறுமியை பார்த்த உடன் அந்த மாடு முட்ட வந்துள்ளது. ஆனால், தனது மகளை சாலையின் மறுபுறம் இழுத்து அந்த பெண் அழைத்து சென்றுள்ளார். இருப்பினும், பெண்ணின் பின்புறம் சென்ற அந்த மாடு சாலையின் ஓரத்தில் உள்ள சுவற்றில் தள்ளி முட்டி மோதியுள்ளது. பெண் கீழே தள்ளி தொடர்ந்து முட்டியது. இதையடுத்து, அருகில் உள்ளவர்கள் வந்து மாட்டினை குச்சியால் அடித்து விரட்டியுள்ளனர். அண்மையில் சென்னையில் கூட ஒரு சிறுமி, மாடு முட்டி படுகாயம் அடைந்தது குறிப்பிடத்தக்கது.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola