Bengaluru Pigeon Thief | புறாவை வைத்து 30 லட்சத்தை சுருட்டிய திருடன்! பெங்களூரை அலறவிட்ட கேடி!
வரிசையாக வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு, திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வந்த நிலையில்.. பெங்களூருவை அலறவிட்ட புறா திருடனை காவல்துறையினர் தட்டி தூக்கி உள்ளனர்..
பெங்களூருவில் அடுத்தடுத்து 50 வீடுகளில் கொள்ளை சம்பவம் நடைபெற்ற நிலையில், 38 வயதான மஞ்சுநாத் என்ற நபரை கைது செய்துள்ளது காவல்துறை. இந்நிலையில் அவரிடம் நடத்திய விசாரணையில் புறாவை வைத்து டெக்னிக்காக யாருக்கும் சந்தேகம் வராமல் அவர் நடத்திய திருட்டு சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உயரமான பல வீடுகள் நிறைந்த அடுக்குமாடி கட்டடங்கள் தான் மஞ்சுநாத்தின் டார்கெட். அதிக அளவில் புறாவை ட்ரைனிங் செய்து வளர்த்து வரும் அவர், கொள்ளையடிக்கும் நாள் அன்று இரண்டு புறாக்களை எடுத்துக்கொண்டு வீதிகளில் நடக்க தொடங்குவார். அப்போது ட்ரான்ஸ்லேட்டர் கேமரா பொருத்தப்பட்ட புறாக்களை பறக்க விடும் அவர், எந்த வீடு பூட்டி இருக்கிறது. எந்த வீட்டில் ஆள் இல்லை என்பதை நோட்டமிட்டு தெரிந்து கொள்வார்.
அதன் பின் அந்த கட்டிடத்திற்குள் நுழையும் அவர், நேராக ஆள் இல்லாத வீட்டிற்கு சென்று முன் கதவை உடைத்து, உள்ளே இருக்கும் பணம் மற்றும் நகைகளை திருடி வந்துள்ளார்.
.
செக்யூரிட்டிகள் இல்லாத பில்டிங் தேர்வு செய்யும் இவர், 50க்கும் அதிகமான வீடுகளில் பெங்களூருவில் கொள்ளை அடித்துள்ளார். சில சமயங்களில் அடுக்குமாடி குடியிருப்பில் யாரேனும் பார்த்துவிட்டு விசாரித்தால், என்னுடைய புறா மேலே போய்விட்டது அதை பிடிப்பதற்காக சொல்கிறேன் என்று கூறி யாருக்கும் சந்தேகம் வராமல் எஸ்கேப் ஆகி வந்துள்ளார் மஞ்சுநாத்.
இந்நிலையில் அவரை கைது செய்துள்ள காவல் துறையினர் 30 லட்சம் மதிப்பிலான 475 கிராம் தங்க நகை மற்றும் ஒரு பைக்கை மீட்டுள்ளனர்.
இதற்கு முன்பே தன்னுடைய குற்ற நடவடிக்கைக்காக மஞ்சுநாத் பலமுறை கைது செய்யப்பட்டிருப்பதாகவும், ரிலீஸ் ஆனதும் தன்னுடைய பழைய பாணியை மாற்றிக்கொண்டு புது டெக்னிக்கல் திருட்டு சம்பவங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளார் அவர். இந்நிலையில் மஞ்சுநாத்தை கைது செய்த காவல்துறையினர் ஒரே நேரத்தில் நிலுவையில் இருந்த பல்வேறு வழக்குகளை முடிக்க தொடங்கியுள்ளனர்.