Annapoorani Arasu Amma : லிஸ்ட் பெருசா போகுதே 3வது திருமணத்திற்கு ரெடியான சர்ச்சை சாமியார் அன்னபூரணி

Continues below advertisement

பிரபல சர்ச்சை சாமியார் அன்னப்பூரணி மூன்றாவது திருமணம் செய்துகொள்வதாக அறிவுத்துள்ளது  சமூக வலைதளங்களில் பேசுப்பொருளாகியுள்ளது. 

செங்கல்பட்டு மாவட்டத்தில் அன்னபூரணி அரசு அம்மன் தொண்டு நிறுவனம் நடத்தி வருபவர் அன்னபூரணி. தன்னை அன்னபூரணி அரசு அம்மனாக மாற்றிக்கொண்டு அவதாரமாக கூறி பக்தர்களுக்கு ஆசி வழங்கி வருகிறார். 
 இதற்கு  பலத்த எதிர்ப்பு எழுந்து, சமூக வலைதளங்களில் பரவி பெரிய  சர்ச்சையை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து யூ டியூப்பில் ஆன்மீக சொற்பொழிவை நடத்தி வருகிறார் அன்னப்பூரணி . மேலும் சமீபத்தில் தான் சாமியார் இல்லை என்று நான் கடவுள் என்று அவருக்கு தானே கோவிலை கட்ட முடிவு செய்து கோவில் கட்டுவதற்கான பணிகளை துவங்கி கோவிலையும் கட்டி முடித்திருந்தார். 

தனது முதல் கணவரை பிரிந்த  நிலையில் இரண்டாவது காதல் கணவரான அரசு என்பவரை திருமணம் செய்து கொண்டார், அதன் பிறகு அரசு மர்மமான முறையில் இறந்த நிலையில் அவருக்கு கோவில் கட்டி வழிப்பட்டார். 
இந்த நிலையில் தான் மூன்றாவது திருமணம் செய்துக்கொள்ள்ப்போவதாக  அன்னப்பூரணி அறிவித்துள்ளார். இது குறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்  என் பாதுகாப்பு கருதியும் சமுதாயத்தினால் எனக்கு எந்த ஒரு தொந்தரவும் இன்றி என்னுடைய ஆன்மீக சேவையை சுதந்திரமாக செய்யவும் என்னுடைய நிர்வாகத்தை கவனித்துக் கொள்ள எந்த ஒரு சுயநலமும் இன்றி விருப்பு வெருப்பின்றி அர்பணிப்பு உணர்வுடன் என்னுடைய அருளை உலக மக்கள் அனைவருக்கும் கொண்டு சேர்ப்பதற்கும் ,

நானும் அரசுவும்  திருமணம் செய்து கொண்ட  நாளான அதே நவம்பர் 28 ல், நான் என்னுடைய ஆன்மீகத்திற்காக தன்னை அர்பணித்த ரோகித்தை திருமணம் செய்து கொள்கிறேன் என்று அறிவிக்கிறேன்.  அன்றைய தினத்தில்  விருப்பம் உள்ளவர்கள் அரசுவின் அடுத்த பரிணாம நிகழ்வில் கலந்து கொண்டு ஆசிர்வாதம் வாங்கி செல்லவும்.சத்தியத்திற்கு மட்டும் கட்டுபட்டு சத்தியம் என்னை எப்படி இயக்குகிறதோ அதன்படி மட்டுமே இயங்குவேன் என தெரிவித்துள்ளார். மேலும் அவரது திருமணம் கீழ்பெண்ணாத்தூர் ஆசிரமத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அன்னப்பூரணி மூன்றாவது திருமணம் செய்துகொள்வதாக அறிவித்துள்ளது  தற்போது சமூக வலைதளங்களில் பேசுப்பொருளாகியுள்ளது.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram