Vasantha Balan Speech | ”காந்தியை படம் பார்த்தால்தான் தெரியுமா?” மோடியை விளாசும் வசந்தபாலன்!

Continues below advertisement

 நீட் தேர்வால் சேவை மனப்பான்மை உள்ள மருத்துவரை இந்த நாடு இழந்து விடுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது -திருச்சி தனியார் மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரபல தமிழ் சினிமா இயக்குனர் வசந்தபாலன் கவலை 

தமிழ் சினிமாவில் அங்காடித் தெரு, வெயில், போன்ற  வெற்றி படங்களின் இயக்குனர் வசந்தபாலன் திருச்சியில் நடைபெற்ற தனியார் மருத்துவமனையில்  புகையிலைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
அதில்..

ஒரு கவுன்சிலர் பதவிக்கு 5000 ரூபாய் கூட சம்பளம் வரவில்லை என்கிறார்கள் ஆனால் அதற்கு 6 லட்சம் வரை செலவு செய்யக்கூடிய அரசியல்வாதிகள் இருக்கும் நாட்டில் இன்று மருத்துவ துறையும் நீட் போன்ற தேர்வுகளால் மிகவும் விலை உயர்ந்த துறையாக மாறிக் கொண்டு வருகிறது

இந்தியா முழுவதும் நீட் தேர்வு பற்றிய விளம்பரம் இல்லாத மாநிலமோ? சாலைகளோ? இல்லை நீட் தேர்வுக்கு அனைத்து மாணவர்களும் தயாராகி வருகிறார்கள். 

5 லட்சம் ரூபாய் சேர்த்து கட்டி விடுங்கள் 12-ம் வகுப்பு முடிந்தவுடன் உங்கள் மகனை நீட் தேர்வுக்கு அனுப்பி விடுகிறோம் என்கிறார்கள் அப்போது அந்த மாணவனின் மனது என்ன சொல்லும்   இப்போது 5லட்சம் கொடுத்தால் பின்னாளில் 50 லட்சமாக சம்பாதித்து கொள்ளலாம் என சொல்கிறதோ என்ற கவலை  இப்போது எனக்கு வருகிறது .

12 ஆம் வகுப்பு படிக்கும் போதே இந்த அஞ்சு லட்சத்தை 500 மடங்கு ஆயிரம் மடங்கு என ஒரு வியாபாரியை  இந்த சமூகம் மற்றும் அரசியல் தயார்படுத்திக் கொண்டிருக்கிறது.

ஒரு கிராமத்தையோ சென்னையையோ விட்டு திருச்சி போன்ற நகரங்களில் இவ்வளவு பெரிய மருத்துவமனையை கட்ட வேண்டும் என்ற சேவை மனப்பான்மை உள்ள ஒரு மருத்துவரை இந்த நாடு இழந்து விடுவோமோ என்று வருத்தம் அளிக்கிறது 

சேவை செய்கிற மருத்துவரை இனி வரும் காலகட்டத்தில் நாம் இழந்து விடுவோமோ என்ற அச்சமும் ஏற்படுகிறது 

(சமீபத்தில் பிரதமர் மோடி காந்தியை பற்றி பேசிய விமர்சனத்திற்கு)

காந்தியை பத்தி சொல்கிறார்கள் காந்தி படம் பார்த்து தான் தெரியும் என்று ஆனால் காந்தி யார் என்பது நமக்குத் தெரியும்.

புகையிலை மிகப் பெரிய சமூக சீர்கேடுகளை தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறது இதற்கு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தற்போது பத்திரிகைகள் பின்னால் ஜாதி பெயர் போடாமல் வருகிறது அந்த நஞ்சை விரட்டி விட்டோம். அதேபோல் தொடர்ந்து கவிதைகள் தொடர் கதைகள், சமூக வலைதளங்கள், ரீல்ஸ் மூலம் என விழிப்புணர்வை ஏற்படுத்தி இந்த புகையிலை என்ற நஞ்சை இந்த சமூகத்தை விட்டு விரட்டி அடிப்போம் என பேசினார்.

இந்நிகழ்ச்சியில் பயிற்சி செவிலியர்கள் மாணவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்..

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram