Tamilnadu Film Producers Council : ’’சூட்டிங்க நிறுத்துங்க!’தயாரிப்பாளர் சங்கம் அதிரடி-சிக்கலில் தனுஷ்

Continues below advertisement

புதிய படப்பிடிப்பு எதையும் வருகிற ஆகஸ்ட் 16ம் தேதிக்கு மேல் தொடங்ககூடாது, நவம்பர் 1 முதல் தமிழ்நாட்டில் அனைத்து திரைப்பட படப்பிடிப்பும் நிறுத்தபடுகிறது, இனி நடிகர் தனுஷை வைத்து யார் படமெடுக்க விரும்பினாலும், முதலில் தயாரிப்பாளர் சங்கத்தை தொடர்பு கொள்ள வேண்டும்.. இப்படி பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கம்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைமையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள், தமிழ்நாடு திரையரங்க மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள், தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்கள், கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் சென்னையில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானங்கள் தமிழ் திரையுலகின் டாப் நட்சத்திரங்களை உலுக்கியுள்ளது.

அதன் படி. முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கும் திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகி 8 வாரங்களுக்கு பிறகு தான் இனி OTT தளங்களில் வெளியிட வேண்டும்.

ஒரு சில நடிகர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் ஒரு தயாரிப்பாளரிடம் அட்வான்ஸ் பெற்றுவிட்டு, அந்த திரைப்படத்தில் பணி பணி புரியாமல், புதியதாக வேறு திரைப்பட நிறுவனங்களுக்கு சென்று வேலை பார்க்க தொடங்கி விடுகிறார்கள் இதனால் ஏற்கனவே அட்வான்ஸ் கொடுத்துள்ள தயாரிப்பாளர்கள் பெரும் பொருளாதார இழப்பை சந்திக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். அதனால், இனி ஒரு நடிகர், நடிகை மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தயாரிப்பாளர்களிடம் அட்வான்ஸ் பெற்று இருந்தால் அந்த திரைப்படத்தை முடித்துக் கொடுக்காமல் அடுத்த திரைப்படங்களுக்கு நடிக்க செல்ல கூடாது. 

குறிப்பாக நடிகர் தனுஷ் பல தயாரிப்பாளர்களிடம் முன்பணம் பெற்றிருக்கும் சூழ்நிலையில் இனி தயாரிப்பாளர்கள், நடிகர் தனுஷ் நடிக்கும் புதிய திரைப்படங்களின் பணிகளை துவங்குவதற்கு முன்பு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தை கலந்தாலோசிக்க வேண்டும். 

மேலும் தயாரிக்கப்பட்ட பல திரைப்படங்களை திரையிட திரையரங்குகள் கிடைக்காமல் தேங்கி நிற்பதால், இந்த நிலையை மாற்ற தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பில் புதிய விதிமுறைகள் உருவாக்கப்பட உள்ளது. அதனால் அந்த புதிய விதிமுறைகள் நடைமுறைக்கு வந்த பின்பே இனி புதிய திரைப்படங்களுக்கான  படப்பிடிப்பை ஆரம்பிக்கலாம். அதன் அடிப்படையில் வருகிற ஆகஸ்ட் 16ம் தேதியுடன் புதிய திரைப்படங்களுக்கான ஷூட்டிங் நிறுத்தி வைக்கபடுகிறது..

ஏற்கனவே படபடப்பில் உள்ள திரைப்படங்களின் விவரங்களை தயாரிப்பாளர் சங்கத்திற்கு முறையாக கடிதம் மூலம் தெரிவிக்க வேண்டும் மேலும் அதனை அக்டோபர் 30-ம் தேதிக்குள் முடித்துக் கொள்ள வேண்டும்.

நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்களின் சம்பளம் மற்றும் இதர செலவுகள் கட்டுக்கடங்காமல் உயர்ந்து கொண்டிருக்கிறது. அதனால் தமிழ் திரைத்துறையை மறுசீரமைப்பு செய்ய வேண்டிய நிலை உள்ளது. அதனால் வருகிற நவம்பர் 1ம் தேதியுடன் தமிழ் சினிமாவின் அனைத்து விதமான படப்பிடிப்பு சம்பந்தப்பட்ட வேலைகளும் நிறுத்தபடுகிறது.

மேலும் இனி திரைத்துறை சம்பந்தமாக வரும் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள், உள்ளடக்கிய கூட்டுக் குழு (Joint Action Committee) அமைக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram