Tamilrockers Admin Arrested | TAMILROCKERS-க்கு முற்றுப்புள்ளி? கையும் களவுமாக சிக்கிய ADMIN

Continues below advertisement

நடிகர் ப்ரித்விராஜின் மனைவி சுப்ரியா பிருத்விராஜ் அளித்த புகாரின் பேரில் மதுரையை சேர்ந்த தமிழ் ராக்கர்ஸ் அட்மின் ஸ்டீபன் ராஜை கொச்சி சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். 

தமிழ்ராக்கர்ஸ் இணையதளத்தின் மூலம் சட்ட விரோதமாக திரைப்படங்களை தொடர்ந்து இணையத்தில் வெளியிட்டு வந்தனர். இதன் மூலம் சினிமா முதலீட்டாளர்கள் முதல் நடிகர்கள் வரை பாதிப்படைந்து வருவதால், இதற்கு தொடர்ந்து எதிர்ப்பு குரல் எழுந்து வருகிறது. பிரித்விராஜ் நடிப்பில் வெளியாகி வெற்றியடைந்த குருவாயூர் அம்பலநடையில் படத்தை இணையதளத்தில் வெளியிட்ட விவகாரத்தில் பிரித்விராஜின் மனைவி புகார் அளித்தார்.

இந்த நிலையில்  கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள  ஒரு தியேட்டரில் படத்தை பதிவு செய்து கொண்டிருந்தபோது மதுரையை சேர்ந்த ஜெப் ஸ்டீபன்ராஜ் கைது செய்யப்பட்டார். இது குறித்து சைபர் போலீசார் நடத்திய விசாரணையில் 12 பேர் இணைந்து செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

தமிழ் ராக்கர்ஸ் தளம் மட்டுமின்றி டெலிகிராம் செயலியிலும் ஸ்டீபன் ராஜ் படங்களை வெளியிட்டு வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட ஸ்டீபன் ராஜை போலீசார் ஐந்து நாட்கள் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram