
Sivaangi Krishnakumar | சன் டிவியில் இணைந்த சிவாங்கிவிஜய் டிவி உடன் சண்டையா?அடுத்தடுத்து வெளியேறும் பிரபலங்கள்
மணிமேகலையை தொடர்ந்து சில விஜய் டிவி பிரபலங்கள் விஜய் டிவியை விட்டு வெளியேறிய நிலையில் தற்போது திடீரென சிவாங்கி சன் டிவியில் இணைந்துள்ளது சின்னத்திரையில் ஹாட் டாப்பிக்காக உள்ளது.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக இருந்த பலர் இப்போது அடுத்தடுத்த சேனல்களுக்கு போய்க் கொண்டிருக்கின்றனர். இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேறியவர்கள் சிலர் விஜய் டிவி விட்டு வெளியே போன மீடியா மாண்ஷன் சன் டிவியில் தொடங்கிய டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சிக்கு சென்று விட்டனர். விஜய் டிவியை விட்டு விலகிய மணிமேகலைக்கு ஜீ தமிழில் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதே நிகழ்ச்சியில் ஏற்கனவே சில வருடங்களுக்கு முன்பே பாபா பாஸ்கர் நடுவராக இருக்கிறார். இப்படி விஜய் டிவி கூடாரமே சமீபத்தில் காலியாகி கொண்டே இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் விஜய் டிவி பல சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. இந்த நிலையில் இவர்களை தொடர்ந்து விஜய் டிவி புகழ் சிவாங்கியும் சன் டிவியில் இணைந்துள்ளது ஹாட் டாப்பிக்காக உள்ளது..
விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சிவாங்கி. இசை குடும்பத்தை சேர்ந்த கிருஷ்ணகுமார் - பின்னி கிருஷ்ணகுமார் மூத்த மகளான சிவாங்கிக்கு ரத்தத்திலேயே இசை ஊறிப்போன ஒன்று. தனது பாடும் திறமையால் சுட்டித்தனமான சுபாவம் கொண்ட சிவாங்கி பலரின் ஃபேவரட் போட்டியாளராக இருந்து வந்தார். சூப்பர் சிங்கர் மூலம் பிரபலமான சிவாங்கி குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ஒரு கோமாளியாக என்ட்ரி கொடுத்தார். அவரின் அசட்டுத்தனமான குழந்தைத்தனம் குறும்பை ரசிக்க துவங்கிய ரசிகர்கள் சிவாங்கியை தனது வீட்டு பெண்ணை போலவே எண்ண துவங்கினர். குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ரீச் எந்த அளவிற்கு இருந்ததோ அதே போல சிவாங்கியின் வளர்ச்சியும் அதிவேகமாக எகிறியது.
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் நடிக்க வாய்ப்புகளும் குவிந்தது. நடிப்பு மட்டுமின்றி பாடகியாகவும் பல மெலடி பாடல்களை பாடி பின்னணி பாடகியானார். சமீப காலமாக ராப் ஸ்டைல் பாடல்களையும் பாடி தான் ஒரு வெர்சடைல் சிங்கர் என்பதை நிரூபித்து வருகிறார். இந்தநிலையில் விரைவில் சன் டிவியில் ஒளிபரப்பவுள்ள நிகழ்ச்சியை சிவாங்கி தொகுத்து வழங்க இருப்பதாக கூறப்படுகிறது. இதன் ப்ரோமோ காட்சிகள் வெளியாகியுள்ளது. இவருடன் தொகுப்பாளர் அஸ்வத்தும் இவருடன் கூட்டணி சேர்ந்து இந்த நானும் ரெளடிதான் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.