
Neelima Rani : 4 கோடி கடன்! நடுத்தெருவில் நின்ற நீலிமா! காலைவாரிய சினிமா கனவு
’’சினிமாவை நம்பி வாழ்க்கையே போச்சு..4 கோடி கடன்ல சிக்கி நடுத்தெருவுல நிக்கிற நிலைமை வந்துச்சு’’ என சின்னத்திரை நடிகை நீலிமா ராணி பேசிய வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.
பிரபல சீரியல் நடிகையாக அறியப்படுபவர் நீலிமா ராணி. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி சின்னத்திரை வெள்ளித்திரை என திரையுலகில் தனக்கென தனி இடத்தை பிடித்தவர். வாணி ராணி தாமரை தலையணைப்பூக்கள் போன்ற பிரபல சீரியல்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் சமீபத்தில் நீலிமா ராணி தனியார் சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்றில் தனது வாழ்க்கையில் சந்தித்த சோதனைகளையும் அதில் இருந்து பீனிக்ஸ் பறவை போல் எப்படி மீண்டு வந்தார் என்பது குறித்தும் மனம் திறந்துள்ளார். அதில் பேசிய அவர், 21 வயதிலேயே எனக்கு திருமணம் நடந்தது. திருமணம் ஆன 6 மாதங்களில் எனது அப்பா இறந்துவிட்டார். அதை என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை. புத்தகங்கள் படித்தும் கோவில்களுக்கு சென்றும் கொஞ்சம் கொஞ்சமாக அதிலிருந்து மீண்டு வந்தேன். அதன்பிறகு 2017 ஆம் ஆண்டு நானும் எனது கணவர் இசைவாணனும் இணைந்து 4 கோடி பட்ஜெட்டில் திரைப்படம் ஒன்றை தயாரித்தோம். கடன் வாங்கி தான் செய்தோம், ஆனால் அந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வரவில்லை. அது குப்பைக்கு தான் சென்றது. ஆனால் அந்த நஷ்டத்தை எங்களால் ஈடுகட்ட முடியவில்லை. தங்கக்கூட இடமில்லாமல் நடுத்தெருவில் நின்றோம்.
பின்னர் மீண்டும் சீரியல்களில் நடிக்கத் தொடங்கினேன். வாணி ராணி சீரியலில் நடித்த போதும் கூட, வீட்டு வாடகை கூட கொடுக்க முடியாமல் நண்பரின் வீட்டில் தங்கி இருந்தோம். ஆனால் தோல்வியை கண்டு கலங்காமல் எங்கள் வெற்றி இலக்கை நோக்கி பயணித்தேன். நாம் சோர்ந்துபோய் உட்கார்ந்து விட்டால் நமக்கு யாருமே கை கொடுக்க வரமாட்டாங்க... நமக்கு நாம தான் கை கொடுத்து உதவ வேண்டும் அதனால் தான் இன்று நல்ல நிலைமைக்கு வந்துள்ளேன் என பாஷிட்டிவாக பேசியுள்ளார் நீலிமா..
மேலும் சினிமா தயாரிப்பாளராக தோற்றாலும், ஒரு நாள் தயாரிப்பாளராக ஜெய்க்க வேண்டும் என்கிற முனைப்போடு கடந்த 2017-ம் ஆண்டு ஜீ தமிழில் ஒளிபரப்பான என்றென்றும் புன்னகை, நிறம் மாறாத பூக்கள் போன்ற சீரியல்களை தயாரித்தார் நீலிமா.
சீரியல்களை தயாரித்தாலும் தனது இலக்கான திரைப்பட தயாரிப்பில் நிச்சயம் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கையுடன் இருக்க்கிறார் நீலிமா ராணி