Vembuli Special Interview : அஜித் சொன்ன வார்த்தை மாறிய வாழ்க்கை! John Kokken emotional interview

திரையரங்குகளில் வெளியாகும் என மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகிய சார்பட்டா பரம்பரை திரைப்படம், ஓடிடியில் அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியானது. இப்படத்தின் டிரெய்லர் வெளியானது முதலே, படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. இந்நிலையில், படம் வெளியான சில மணி நேரங்களிலேயே #SarpattaParambarai ஹேஷ்டேக் சமூக வலைதளங்களில் டிரெண்டானது. இந்த படத்தில், வேம்புலி கதாப்பாத்திரத்தில் நடித்திருந்த ஜான் கொக்கன், ரியல் லைஃபில் பிரபல வி.ஜே பூஜாவை திருமணம் செய்து கொண்டவர். சிவா இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்த வீரம் திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான ஜான், நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்போது சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் நடித்துள்ளார்.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola