Samantha Divorce Controversy : ‘’சமந்தாவை வைத்து டீல் !’’காங். அமைச்சர் சர்ச்சை பேச்சு

Continues below advertisement

நடிகை சமந்தா விவாகரத்துக்கு தெலங்கானா முன்னாள் அமைச்சர் கேடி ராமா ராவ் தான் காரணம் என தெலங்கானா அமைச்சர் சுரேக பேசியுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்நிலையில் அமைச்சர் கொண்டா சுரேகாவுக்கு சமந்தா மற்றும் நாகசைதன்யா குடும்பத்தினர் மட்டுமின்றி திரையுலகினர் பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்

2017 ஆண்டில் பெற்றோர் சம்மததுடன் காதல் திருமணம் செய்துகொண்ட சமந்தா நாகசைதன்யா தனிப்பட்ட காரணங்களுக்காக 4 ஆண்டுகளுக்கு பின்னர் திருமண வாழ்க்கையில் இருந்து பிரிந்தனர். சில நாட்களுக்கு முன் நாக சைதன்யா நடிகை சோபிதாவை மறுமணமும் செய்துகொண்டார். இந்நிலையில் இருவரும் பிரிந்து 3 ஆண்டுகளுக்கு மேல் ஆன நிலையில், மந்தா - நாக சைதன்யா விவாகரத்து பற்றி பேசி பரபரப்பை பற்றவைத்துள்ளார் தெலங்கானா வனத்துறை அமைச்சர் கோண்டா சுரேகா.

இதுகுறித்து பேசிய அவர், கடந்த ஆட்சியில் நாக சைதன்யாவின் வணிக கட்டடத்தை இடிக்காமல் இருக்க ராமா ராவ் நாகர்ஜுனாவிடம் சமந்தாவை வைத்து டீல் பேசியதாகவும் அதற்கு அவர் ஒப்புகொண்டதாலேயே சமந்தா விவாகரத்து பெற்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எனவே,சமந்தா- நாக சைதன்யா விவகாரத்துக்கு தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவின் மகன் கே.டி.ராமாராவ் தான் காரணம் என்றும், அவரின் மிரட்டலுக்கு பயந்து பல நடிகைகள் சினிமாவை விட்டே காணாமல் போய்விட்டனர் என்றும் குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.

இந்நிலையில் அமைச்சரின் இந்த கருத்துக்கு சமந்தா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட சமந்தா, பரஸ்பர சம்மதத்துடனேயே தங்களின் விவாகரத்து நடந்ததாகவும், ‘‘உங்கள் அரசியல் சண்டையில் என்னை இழுக்க வேண்டாம், அமைச்சராக உள்ளவர்கள் பொறுப்புடன் சொற்களை கையாள வேண்டும் எனவும் கூறியுள்ளார். ’’ என சமந்தா காட்டமாக கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த விவகாரத்தில் நாக சைதன்யாவும் முன்னாள் மனைவி சமந்தாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார். அவர் தெரிவித்துள்ளதாவது, தங்களின் தனிப்பட்ட வாழ்க்கையையும் எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு இருவரும் நீண்ட ஆலோசனைக்குப் பிறகே இத்தகைய கடினமான முடிவெடுத்ததாகவும், அமைச்சர் கூறியது அபத்தமானது என்றும், சமந்தா மற்றும் தங்கள் குடும்பத்தினரின் கண்ணியத்திற்காகவே தாம் இதுவரை அமைதி காத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அமைச்சருக்கு கடும் கண்டனம் தெரிவித்த நாகர்ஜுனா, “அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கும் திரையுலக பிரபலங்களின் வாழ்க்கையை, உங்களது எதிரிகளை விமர்சிப்பதற்காக பயன்படுத்தாதீர்கள். தயவுசெய்து மற்றவர்களின் தனியுரிமையை மதியுங்கள். பொறுப்பான பதவியில் இருக்கும் ஒரு பெண்ணாக, எங்கள் குடும்பத்திற்கு எதிரான உங்கள் கருத்துக்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் முற்றிலும் பொருத்தமற்றவை மற்றும் தவறானவை, உடனடியாக உங்கள் கருத்தை திரும்ப பெற வேண்டும் என சுரேகாவை கடுமையாக சாடியுள்ளார்.

மேலும் ஜூனியர் எண்டிஆர், குஷ்பூ உள்ளிட்ட பலரும் திரையுலகினர் குறித்து இத்தகைய அவதூறு பரபரப்புவது கண்டனத்துக்குரியது என அமைச்சர் கோண்டா சுரேகாவை எச்சரித்துள்ளனர்.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram