Amala supports Samantha : ’’அமைச்சர் மாதிரி பேசு..அரக்கி மாதிரி பேசாத’’வெளுத்து வாங்கிய அமலா!

Continues below advertisement

நடிகை சமந்தா விவாகரத்தில் கேடி ராமாராவை தொடர்புபடுத்தி காங் அமைச்சர் சர்ச்சை கருத்தை தெரிவித்திருந்த நிலையில், அமைச்சர் மாதிரி பேசு அரக்கி மாதிரி பேசாதே என சமந்தாவின் முன்னாள் மாமியார் அமலா அக்கினேனி விளாசியுள்ளார்.

தெலங்கானாவில் கடந்த kcr ஆட்சியில் நாக சைதன்யாவின் வணிக கட்டடத்தை இடிக்காமல் இருக்க ராமா ராவ் நாகர்ஜுனாவிடம் சமந்தாவை வைத்து டீல் பேசியதாகவும் அதற்கு அவர் ஒப்புகொண்டதாலேயே சமந்தா விவாகரத்து பெற்றதாகவும் காங்கிரஸ் அமைச்சர் கோண்டா சுரேகா தெரிவித்திருந்தார். அவரின் மிரட்டலுக்கு பயந்து பல நடிகைகள் சினிமாவை விட்டே காணாமல் போய்விட்டனர் என்றும் குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.

அமைச்சரின் இந்த சர்ச்சைக்குரிய கருத்து சம்பந்தப்பட்டோரையும் திரையுலகினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த விவகாரத்தில் சமந்தா, நாகர்ஜுனா, நாக சைதன்யா என அனைவரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் தெலுங்கு திரை பிரபலங்களும் அமைச்சரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில் சமந்தாவின் முன்னாள் மாமியாரும் நாகார்ஜுனாவின் மனைவியுமான அமலாவின் பதிவு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த விவகாரம் குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அவர், 

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரனமாக கண்னியமான நபர்கள் குறித்து ஓர் பெண் அமைச்சர் இப்படி பேசலாமா? அரக்கி போல பேசலாமா? காஞ்சுரிங் பேய் போல பொய்யான குற்றச்சாட்டுகளை ஒரு பெண் மீது எப்படி சுமத்தலாம்? என காட்டமாக கேள்வி எழுப்பிய அவர் எனது கணவர் மீது இப்படி ஒரு பொய் குற்றச்சாட்டை எப்படி முன்வைக்கலாம். நமது நாட்டின் அரசியல் தலைவர்கள் இப்படி கிரிமினல்கள் போல செயல்பட்டால் நாட்டின் நிலை எப்படி இருக்கும்? 

ராகுல் காந்திஜி, நீங்கள் மனித நேயத்தில் நம்பிக்கை கொண்டவராக இருந்தால், தயவுசெய்து உங்கள் அரசியல்வாதிகளைக் கட்டுப்படுத்தி, எனது குடும்பத்தினரிடம் மன்னிப்புக் கேட்பதோடு, அமைச்சர் தனது விஷமத்தனமான அறிக்கைகளை வாபஸ் பெறச் செய்யுங்கள். என ராகுல் காந்திக்கு அமலா கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த விவகாரத்தில் தற்போது அமைச்சர் கோண்டா சுரேகா மன்னிப்பு கோரியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram