கெட்டவார்த்தை பேசுனா தப்பில்ல மாஸ்டர் மகேந்திரன் வாக்குவாதம்! நீயா நானாவில் நடந்தது என்ன? | Master Mahendran

நீயா நானா நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் மாஸ்டர் மகேந்திரன் கெட்டவார்த்தை குறித்து பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. நீயா நானா நிகழ்ச்சியில் ஒரு பக்கம் சினிமா விமர்சகர்கள் மற்றொரு பக்கம் பொதுமக்கள், திரைத்துறையை சேர்ந்தவர்கள் பங்கேற்ற நிலையில் காரசார விவாதமாக மாறியுள்ளது. 

சினிமா விமர்சனத்தை எப்படி பார்க்கிறீர்கள் என கோபிநாத் கேள்வி எழுப்பினார். அதற்கு பொதுமக்கள் பக்கம் இருந்து சினிமா விமர்சனமே வேண்டாம் என்று தான் கூறுகிறோம். படத்தை பார்த்து நாங்களே முடிவு செய்துகொள்கிறோம். ஒரு நல்ல படத்தை மக்களுக்கு பிடிக்காத படமாகவும், சகித்து கொள்ள முடியாத வகையில் வெளியாகும் படத்தை நல்ல படமாக சித்தரித்து பொய்யாக விமர்சனம் செய்கின்றனர். விமர்சனமே வேண்டாம் என வாதிட்டனர். அதற்கு அசைவு தெரிவிக்காத கோபிநாத் விமர்சனத்தில் குறைகள் இருந்தால் சுட்டி காட்டலாம் கோரிக்கை வைக்கலாம். ஆனால், விமர்சனமே வேண்டாம் என கூறுவதை ஏற்க முடியாது என தெரிவித்தார். 

இந்நிலையில், நீயா நானா நிகழ்வில் பங்கேற்ற மகேந்திரன் லேபிள் வெப்சீரிஸில் நான் நடித்திருந்தேன். அதில் கெட்டவார்த்தை பேசுவது போன்று நடித்திருந்தேன். அதற்கு இங்கிருக்கும் சினிமா விமர்சகர்கள் என்ன மிக மோசமான வார்த்தைகளால் விமர்சித்திருந்தனர். இது என்னை மிகவும் பாதித்தது. மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானேன் என மகேந்திரன் தெரிவித்தார். 

மேலும் கெட்டவார்த்தை பேசுவது குறித்து வடசென்னை பகுதியை சேர்ந்த தாய்மார்களிடம் கேட்ட போது கெட்டவார்த்தை பேசுவது ஒன்றும் தவறு இல்லை. கோபம் வந்தா வேறு எப்படி பேசுவது என என்னிடம் கூறினார்கள்.  எதார்த்தமாக பார்க்க வேண்டிய விசயத்தை ரொம்ப தவறானது போல் ஏன் பேசுகின்றனர் என மகேந்திரன் கேட்டார். அதற்கு சினிமா விமர்சகர் ஒருவர் இந்த கருத்திற்கு நான் உடன்படமாட்டேன். அந்த ஏரியா என்று தவறாக பேசுகிறார். கெட்டவார்த்தை பேசுவது ரொம்ப தவறான விஷயம். படங்களில் மிகவும் ரத்தம் தெறிக்கும் காட்சிகளும், இதுபோன்ற விசயங்களை Glorification செய்வது தவறு என சினிமா விமர்சகர் தெரிவித்தார். தற்போது இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதைப்பார்த்த ரசிகர்கள் மகேந்திரனை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola