Madhampatti Rangaraj : ’Oii பொண்டாட்டி...மாதம்பட்டி அட்ராசிட்டி!’’வீடியோ வெளியிட்ட ஜாய்
மாதம்பட்டி ரங்கராஜின் இரண்டாவது மனைவியாக அறியப்படும் ஜாய் கிரிஷில்டா, ரங்கராஜ் தன்னை கர்ப்பமாக்கி ஏமாற்றி விட்டதாக புகார் அளித்திருந்த நிலையில், தற்போது மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை பொண்டாட்டி என அழைத்து கொஞ்சும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நடிகரும் சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை கர்ப்பமாக்கி ஏமாற்றிவிட்டதாக அவரது இரண்டாவது மனைவி ஜாய் கிரிஷில்டா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தன்னை கோவிலில் வைத்து திருமணம் செய்துகொண்ட ரங்கராஜ் சேர்ந்து வாழ மறுப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
ஏற்கனவே ஸ்ருதி என்ற பெண்ணுடன் திருமணமாகி ரங்கராஜிற்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில்ரங்கராஜ் ஸ்ருதியை பிரிய போவதாகவும் ஜாயை திருமணம் செய்து கொள்ளப்போவதாகம் கூறப்பட்டது. இந்நிலையில் தான் சில வாரங்களுக்கு முன் ஜாய் கிரிஷில்டா ரங்கராஜுடன் கோவிலில் திருமணம் செய்து கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை கிளப்பினார்.
அதுமட்டுமில்லாமல், தான் 6 மாதம் கர்ப்பமாக உள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார். ஆனால் இந்த செய்திக்கும் ரங்கராஜ் வாய்திறக்காமல் மவுனம் காத்து வந்தார். இதனையடுத்து மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை 7 மாதம் கர்ப்பமாக்கி ஏமாற்றி விட்டதாக ஜாய் சென்னை காவல் ஆணையகரத்தில் புகார் அளித்துள்ளார். சென்னையில் தன்னுடன் கோவிலில் திருமணம் செய்துகொண்ட ரங்கராஜ் சேர்ந்து வாழ மறுப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் ஜாய் கிரிஷில்டா தொடர்ந்து ரங்கராஜை ப்ளாக்மெயில் செய்யும் வகையில் தங்களது நெருக்கமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.